spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைவீர கிழவன் காமெனி! அமெரிக்காவை அலறவிடும் தலைவன்!

வீர கிழவன் காமெனி! அமெரிக்காவை அலறவிடும் தலைவன்!

-

- Advertisement -

ஈரான் உச்ச தலைவர் காமெனி, தனி ஒரு நபராக இருந்துகொண்டு இஸ்ரேல் – அமெரிக்காவை எதிர்த்து போர் புரிந்து அவர்களை அடி பணிய வைத்திருக்கிறார். அவர் 21ஆம் நூற்றாண்டின் உலகின் மிகப்பெரிய தலைவராக உருடுத்துள்ளார் என்றும் மூத்த பத்திரிகையாளர் உமாபதி தெரிவித்துள்ளார்.

umapathi

we-r-hiring

இஸ்ரேல் – ஈரான் போர் நிறுத்தம் மற்றும் ஈரான் உச்ச தலைவர் அயத்துல்லா அலி காமெனியின் வீரம் செறிந்த போர் குறித்தும் மூத்த பத்திரிகையாளர் உமாபதி யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:- இஸ்ரேல் – ஈரான் நாடுகள் இடையே போர் நிறுத்தம் அமலுக்கு வந்திருக்கிறது. ஈரானின் உச்ச தலைவர் 84 வயதாகும் அயத்துல்லா அலி கமேனியின் அனுபவமும், போரில் உறுதியுடன் நின்ற அவரது வீரம் போர் நிறுத்தம் ஏற்பட முக்கிய காரணமாகும். அத்துடன் இவ்வளவு நாட்களாக ஈரான் வைத்திருந்த ஆயுதங்கள் மற்றும் ரஷ்யா, சீனா ஆதரவுடன் அமெரிக்காவை அலறவிட்டுள்ளார். அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்தியா – பாகிஸ்தான் நாடுகளை பொருளாதார உறவு வைத்துக்கொள்ள மாட்டேன் என்று மிரட்டியதால் இரு நாடுகளும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டன என மீண்டும் மீண்டும் சொல்லி வருகிறார். அவர் சொன்னது உண்மைதான். ஈரானுக்கு எதிரான போரில் இஸ்ரேல் வெற்றி பெற்றிருந்தால், இஸ்ரேல் உலகின் மிகவும் வலிமையான நாடாக மாறியிருக்கும். உலக நாடுகளை எல்லாம் இஸ்ரேலை வைத்து அமெரிக்கா மிரட்ட தொடங்கி இருக்கும். எந்த நாடாக இருந்தாலும் தங்களுடன் வியாபார ரீதியாக ஒத்துவரவில்லை என்றால், ஈரானுக்கு நிகழ்ந்ததை குறிப்பிட்டு இஸ்ரேலை வைத்து மிரட்டியிருப்பார்கள்.

இப்படி இருக்கின்ற சூழலில் ஈரான், இஸ்ரேலை கடுமையாக தாக்கி சேதப்படுத்தி விட்டது. இதன் காரணமாக ஈரானின் ஆயுத வியாபாரம் முழுமையாக படுத்துவிட்டது. இஸ்ரேல் இழப்புகளில் இருந்து மீண்டு வருவதற்கு இன்னும் 10 ஆண்டுகள் ஆகும். இதனை செய்து உலகிற்கு மிகப்பெரிய நன்மையை ஈரான் செய்திருக்கிறது. ஈரானை அழித்து சக்தி வாய்ந்த நாடாக மாறிவிட்டால், அதை வைத்து உலகிற்கு அயர்ன் டோம் விற்கலாம் என்று இஸ்ரேல் நினைத்துக் கொண்டிருந்தது. ஆனால் அயர்ன்டோமில் ஓட்டை போட்டு, அந்த தொழில்நுட்பத்தை ஒன்றுமில்லை என்று கமேனி செய்துவிட்டார். இப்படிதான் ஈரான் உலகை காப்பாற்றியது.  இல்லை என்றால் அயர்ன்டோம் தொழில்நுட்பத்தை வைத்து எதிரி நாடுகளின் ராக்கெட்டுகள், ஏவுகணைகளை தகர்த்துவிட்டு அமெரிக்காவின் போர் விமானங்கள் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைகள், ஆயுதங்களை வைத்து எதிரி நாடுகளை தாக்கி அழிப்பார்கள். மேலும், அமெரிக்காவின் ஆயுதங்களையும் மற்ற நாடுகளுக்கு விற்பனை செய்ய வைப்பார்கள். தற்போது அயர்ன்டோம் தொழில்நுட்பத்தால் ஏவுகணைகளை தடுக்க முடியாது என்று ஈரான் நிரூபித்துள்ளது. தற்போது இஸ்ரேலுக்கு விழுந்த பலத்த அடியின் காரணமாக அவர்களுக்கு வியாரம் பாதிக்கப்பட்டது மட்டுமின்றி அமெரிக்காவின் ஆயுத வியாபாரமும் படுத்துவிட்டது. இதை செய்து முடித்த சாதனையாளர் வீரக்கிழவன் கமேனிதான்.

இந்த நிலையில், கடந்த மாதம் அமெரிக்காவின் வான் பரப்பு முழுமைக்கும் பாதுகாப்பு வழங்கிடும் வகையில் 8 லட்சம் கோடி மதிப்பீட்டில் கோல்டன் டோம் என்கிற பாதுகாப்பு அமைப்பை ஏற்படுத்தி தருவதாக இஸ்ரேல் உடன் அதிபர் டிரம்ப் ஒப்பந்தம் போட்டிருந்தார். அயர்ன் டோம் தொழில்நுட்பத்தால் ஏற்படுத்தப்படும் இந்த வான் பாதுகாப்பு அமைப்பிற்கான பணிகளையும் இஸ்ரேல் தொடங்கிவிட்டது. இந்த நிலையில் தான் ஈரான் நடத்திய தாக்குதலில், அயர்ன் டோம் தொழில்நுட்பம் தோல்வி அடைந்திருக்கிறது. இது போரில் ஏற்பட்ட தோல்வி மட்டும் கிடையாது. அயர்ன்டோம் என்கிற தொழில்நுட்பத்தையே தோல்வி அடைய செய்திருக்கிறார்கள். இதன் விளைவாக அமெரிக்கா கோல்டன்டோம் திட்டத்தை நிறுத்திவிடுவார்கள். இதனால் இஸ்ரேலுக்கு கிடைக்க இருந்த 8 லட்சம் கோடி பணத்தில் ஈரான் மண்ணை போட்டு விட்டது. இஸ்ரேலுக்கு இது மட்டும் பிரச்சினை கிடையாது. ஈரானின் ராக்கெட் தாக்குதலில் முக்கிய நகரங்கள் அழிந்துவிட்டன. கிட்டத்தட்ட 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் மக்கள் வரை கொல்லப்பட்டனர். ஆனால் பெரிய இழப்புகள் ஏற்படவில்லை என்று இஸ்ரேல் கூறி வருகிறது. ஆனால் உண்மையில் பெரிய அளவில் உயிரிழப்பு ஏற்பட்டிருக்கிறது.  மொசாட் தலைமை அலுவலகம், மைக்ரோசாப்ட் அலுவலகம், ஆயுத ஆராய்ச்சி நடைபெறும் வீஸ்மன் பல்கலைக்கழகம், ராணுவ தளங்கள் போன்றவற்றை ஈரான் சின்னாபின்னமாக்கிவிட்டது.

இதற்கு எல்லாம் காரணம் வீர தீரமாக போராடிய கமேனி ஆவார். தற்போது வரை அவர் எங்கே இருக்கிறார் என்று அமெரிக்காவுக்கு தெரியாது. அவர் எங்கே இருக்கிறார் என்று எங்களுக்கு தெரியும். நாங்கள் அவரை கொல்ல மாட்டோம் என்று அமெரிக்கா சொல்வது உண்மை கிடையாது. இப்படி இருக்கிற சூழலில் மீண்டும் மீண்டும் இந்தியா – பாக். போரை நான்தான் நிறுத்தினேன் என்று டிரம்ப் சொல்வதற்கு காரணம், சர்வதேச நாடுகளுக்கு அவர் விடுக்கும் மிரட்டலாகும். ஆனால் ஈரான் உடன் போருக்கு பின்னால் அவர் பிச்சைக்காரன் போன்று கெஞ்சுவதாக ஈரான் சொல்கிறது. அமெரிக்கா, சீனா நாடுகளின் மறைமுக உதவியோடு ஈரான் ஒற்றை ஆளாக நின்று இஸ்ரேல் – அமெரிக்கா என 2 நாடுகளையும் தாக்கி அடிபணிய வைத்திருக்கிறது. அமெரிக்காவையே கெஞ்சி கூத்தாட வைத்த ஒரு வீரக்கிழவன் தான் இந்த கமேனி. தன்னுடைய அனுபவத்தை மட்டும் வைத்து, தலைமறைவாக ஒழிந்துகொண்டு மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்காவின் நிலைகள் மீது தாக்குதல் நடத்தினார். சதாம் உசேன், கடாஃபி போன்றவர்களை கொன்ற அமெரிக்காவால், கமேனியை ஒன்றும் செய்ய முடியவில்லை. இதன் மூலம் அமெரிக்க உலக வல்லரசு எல்லாம் கிடையாது. அவர்களை யார் வேண்டுமானாலும் அடிக்கலாம் என்று அமெரிக்காவின் பிம்பத்தையே உடைத்து நொறுக்கிவிட்டார்.

ஈரானின் அணு சக்தி நிலையங்களின் மீது அமெரிக்கா பி-2 பாம்பரை கொண்டு தாக்குதல் நடத்தினாலும், அவற்றை முன்னதாகவே மறைத்து வைத்து தாக்குதலில் இருந்து பெரிய அளவில் பாதிப்பு ஏற்படாத வகையில் நாட்டையும் உலகையும் காப்பாற்றி உள்ளார். இதுதான் அவர் செய்த வாழ்நாள் சாதனையாகும். முன்னதாக கமேனி சொன்னார், 2 ஆயிரம் ஆண்டு கால உலக வரலாற்றில் ஈரான் யாரிடமும் பணிந்தது கிடையாது. ஒன்று எதிரிகளை அழிப்போம். அல்லது அழிந்து போவோமே தவிர யாரிடமும் அடி பணிய மாட்டோம் என்று சொன்னார். அதுபோலவே வீர தீரமாக போராடி உலகையே காப்பாற்றி உள்ளார். உலகையே மிரட்டிய டிரம்பை, வடிவேல் போன்று காமெடியனாக மாற்றியது அவர்தான். இதன் மூலம் 21ஆம் நூற்றாண்டின் மிகப்பெரிய உலக தலைவராக மாறியுள்ளார். அவர் போரை முழுமையாக நிறுத்துவதாக அறிவிக்கவில்லை. அமெரிக்காவின் கோரிக்கையை ஏற்று தற்காலிகமாக நிறுத்துவதாக தெரிவித்துள்ளார். இஸ்ரேல் இன்னும் கொஞ்சம் நாட்களுக்கு காசா மீது தாக்குதல் நடத்த முடியாது. அப்படி நடத்தினால் ஈரான் நிச்சயமாக நேரடியாகவே பதில் தாக்குல் நடத்தும். யாராலும் அதை தடுக்க முடியாது என்கிற நிலைமையை ஈரான் ஏற்படுத்தி இருக்கிறது, இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ