spot_imgspot_imgspot_imgspot_img
Homeதிருக்குறள்112 - நலம் புனைந்து உரைத்தல், கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை

112 – நலம் புனைந்து உரைத்தல், கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை

-

- Advertisement -

நலம் புனைந்து உரைத்தல் ,கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை

1111. நன்னீரை வாழி அனிச்சமே நின்னினும்
         மென்னீரள் யாம்வீழ் பவள்

கலைஞர் குறல் விளக்கம்அனிச்ச மலரின் மென்மையைப் புகழ்ந்து பாராட்டுகிறேன். ஆனால் அந்த மலரைவிட மென்மையானவள் என் காதலி.

we-r-hiring

1112. மலர்காணின் மையாத்தி நெஞ்சே இவள்கண்
          பலர்காணும் பூவொக்கும் என்று

கலைஞர் குறல் விளக்கம்மலரைக்கண்டு மயங்குகின்ற நெஞ்சமே! இவளுடைய கண்ணைப் பார்; பலரும் கண்டு வியக்கும் மலராகவே திகழ்கிறது.

1113. முறிமேனி முத்தம் முறுவல் வெறிநாற்றம்
         வேலுண்கண் வேய்த்தோ ளவட்கு

கலைஞர் குறல் விளக்கம்முத்துப்பல் வரிசை. மூங்கிலனைய தோள் மாந்தளிர் மேனி. மயக்கமூட்டும் நறுமணம், மையெழுதிய வேல்விழி; அவளே என் காதலி!

1114. காணின் குவளை கவிழ்ந்து நிலனோக்கும்
         மாணிழை கண்ணொவ்வேம் என்று

கலைஞர் குறல் விளக்கம்என் காதலியைக் குவளை மலர்கள் காண முடிந்தால், “இவள் கண்களுக்கு நாம் ஒப்பாக முடியவில்லையே!” எனத் தலைகுனிந்து நிலம் நோக்கும்.

1115. அனிச்சப்பூக் கால்களையாள் பெய்தாள் நுசுப்பிற்கு
          நல்ல படாஅ பறை

கலைஞர் குறல் விளக்கம்அவளுக்காக நல்லபறை ஒலிக்கவில்லை; ஏனெனில் அவள் இடை ஒடிந்து வீழ்ந்துவிட்டாள்; காரணம், அவள் அனிச்ச மலர்களைக் காம்பு நீக்காமல் தலையில் வைத்துக்கொண்டதுதான்.

1116. மதியும் மடந்தை முகனும் அறியா
          பதியின் கலங்கிய மீன்

கலைஞர் குறல் விளக்கம்மங்கையின் முகத்துக்கும், நிலவுக்கும் வேறுபாடு தெரியாமல் விண்மீன்கள் மயங்கித் தவிக்கின்றன.

1117. அறுவாய் நிறைந்த அவிர்மதிக்குப் போல
          மறுவுண்டோ மாதர் முகத்து

கலைஞர் குறல் விளக்கம்தேய்ந்தும், வளர்ந்தும் ஒளிபொழியும் நிலவில் உள்ள சிறுகளங்கம்கூட. இந்த மங்கை நல்லாள் முகத்தில் கிடையாதே!

1118. மாதர் முகம்போல் ஒளிவிட வல்லையேல்
         காதலை வாழி மதி

கலைஞர் குறல் விளக்கம்முழுமதியே! என் காதலுக்குரியவளாக நீயும் ஆக வேண்டுமெனில், என் காதலியின் முகம் போல ஒளிதவழ நீடு வாழ்வாயாக.

1119. மலரன்ன கண்ணாள் முகமொத்தி யாயின்
         பலர்காணத் தோன்றல் மதி

கலைஞர் குறல் விளக்கம்நிலவே! மலரனைய கண்களையுடைய என் காதல் மங்கையின் முகத்திற்கு ஒப்பாக நீயிருப்பதாய்ப் பெருமைப்பட்டுக் கொள்ள வேண்டுமேயானால் (அந்தப் போட்டியில் நீ தோல்வியுறாமல் இருந்திட) பலரும் காணும்படியாக நீ தோன்றாது இருப்பதே மேல்.

1120. அனிச்சமும் அன்னத்தின் தூவியு மாதர்
          அடிக்கு நெருஞ்சிப் பழம்

கலைஞர் குறல் விளக்கம்அனிச்ச மலராயினும், அன்னப்பறவை இற்காயினும் இரண்டுமே நெருஞ்சி முள் தைத்தது போல் துன்புறுத்தக் கூடிய அளவுக்கு. என் காதலியின் காலடிகள் அவ்வளவு மென்மையானவை.

MUST READ