spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சென்னைகாசிமேடு மீனவர் வலையில் சிக்கிய 150 கிலோ பால் சுறா! மருத்துவ குணம் மிக்க கூரை...

காசிமேடு மீனவர் வலையில் சிக்கிய 150 கிலோ பால் சுறா! மருத்துவ குணம் மிக்க கூரை கத்தாழை மீன்களும் பிடிபட்டதால் மகிழ்ச்சி!

-

- Advertisement -

காசிமேடு மீனவர்கள் வலையில் 150 கிலோ எடையிலான ஒற்றை பால் சுறா மற்றும் தலா ஒன்றரை லட்சம் ரூபாய் மதிப்புள்ள 8 கூரை கத்தாழை மீன்கள் பிடிபட்டதால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

we-r-hiring

சென்னை காசிமேடு பகுதியை சேர்ந்த செந்தமிழன் என்கிற மீனவர் செம்மீன் என்ற படகில் கடந்த புதன்கிழமை ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்றார். அப்பொழுது அவரது வலையில் அறிய வகையான பால் சுறா ஒன்று சிக்கியுள்ளது. இதனை அடுத்து அந்த மீனை கரைக்கு கொண்டு வந்த செந்தமிழன், கிரேன் மூலம் பால்சுறா மீனை விற்பனைக்கு எடுத்துச் சென்றார். பால் சுறா கிலோ 300 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதால் 150 எடை கொண்ட இந்த மீன் ரூ.45 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாளர்கள் ஏலத்தில் எடுத்துக்கொண்டனர்.

இதேபோல் காசிமேட்டை சேர்ந்த குமரேசன் என்ற மீனவர் படகில் அரிய வகையிலான மருத்துவ குணம் நிறைந்த கூரை கத்தாழை மீன்கள் 8-க்கும் மேற்பட்ட மீன்கள் சிக்கின. 10 கிலோ முதல் 25 கிலோ வரை எடை கொண்ட கூரை கத்தாழை மீன்கள் சென்னையில் கிலோ 3 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது. அதேவேளையில் ஆந்திர பகுதிகளில் ஆண் மீன் கிலோ ரூ.5,500-க்கும், பெண் மீன் கிலோ ரூ.4,500-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி, ஒரு மீன் விலை ஒன்றரை லட்ச ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதால், 8 மீன்களையும் ஆந்திராவுக்கு விற்பனைக்காக எடுத்துச்சென்றனர்.

MUST READ