சிங்கப்பூர், டெல்லி, மும்பை செல்ல வேண்டிய 6 விமானங்கள் தாமதமாக சென்றதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினா்.
சென்னையில் இருந்து சிங்கப்பூர், டெல்லி, மும்பை செல்ல வேண்டிய 6 ஏர் இந்தியா விமானங்கள் இன்று திடீரென 2 மணி நேரத்துக்கு மேல் தாமதமாக புறப்பட்டு சென்றதால் பயணிகள் கடும் அவதி அடைந்துள்ளனர். குறித்த நேரத்திற்கு செல்ல முடியாமல் பயணிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினா். இதுகுறித்து சென்னை விமான நிலைய அதிகாாிகள் கூறும் போது, நிர்வாக காரணங்களால் ஏர் இந்தியா விமானங்கள் தாமதமாக இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. நிர்வாக காரணம் என்று கூறினாலும் போதிய விமானிகள் இல்லாததால் விமானங்கள் இயக்க தாமதம் என தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், விமான நிறுவனம் முன்கூட்டியே எந்த தகவலும் அளிக்காமல், பயணியரை அலைக்கழித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

https://www.apcnewstamil.com/news/politics/why-is-there-no-such-concern-for-government-employees-in-your-government-
