spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் அமல்- சரத்குமார் வரவேற்பு

ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் அமல்- சரத்குமார் வரவேற்பு

-

- Advertisement -

ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் அமல்- சரத்குமார் வரவேற்பு

ஆன்லைன் ரம்மி தடைச் சட்டம் உடனடியாக அமலுக்கு வந்திருப்பதை வரவேற்பதாக சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.

sarathkumar

இதுதொடர்பாக சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆன்லைன் சூதாட்டத் தடை மற்றும் ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குபடுத்துதல்” மசோதா கடந்த 24 – ந்தேதி தமிழக சட்டப்பேரவையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டு, ஆளுநரின் ஒப்புதல் பெறப்பட்ட நிலையில் உடனடியாக அரசாணை பிறப்பிக்கப்பட்டு சட்டம் அமலுக்கு வந்திருப்பது வரவேற்கத்தக்கது.

we-r-hiring

19.10.2022 – இல் தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா தாக்கல் செய்யப்பட்டு, நிறைவேற்றப்பட்டு தமிழக ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டதில், ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் திருப்பி அனுப்பியதால், மசோதா காலாவதியான நிலையில், மீண்டும் சட்டமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டது. இதற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டுமென அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி உட்பட பல்வேறு தரப்பினரும் வலியுறுத்திய நிலையில் தற்போது ஒப்புதல் அளிக்கப்பட்டு, அமல்படுத்தியதில் தடை செய்யப்பட வேண்டிய ஆன்லைன் விளையாட்டுகளை காவல்துறையினர் பட்டியலிட்டு வருகிறார்கள்.

இந்திய அரசியலமைப்பின் 7 – வது அட்டவணையின் கீழ் பட்டியலிடப்பட்டிருக்கும் பந்தயம், சூதாட்டம் விவகாரங்களில் மாநில அரசுக்கு இருக்கும் சட்ட அதிகாரத்தை பயன்படுத்தி, தடைச் சட்டம் பிறப்பிக்கப்பட்டாலும், நீதிமன்றங்கள் ஏற்கெனவே ஆன்லைன் ரம்மியை அறிவுப்பூர்வமான விளையாட்டு என பதிவு செய்துள்ளதை கவனத்தில் கொண்டு சட்டச்சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டும்.

மேலும், தமிழ்நாட்டில் தடை என்றபோதிலும் பிற மாநிலங்களின் பெயர்களில் பதிவு செய்து ஆன்லைன் சூதாட்ட விளையாடும் சாத்தியக்கூறுகள் இருப்பதை சிந்தித்து, இந்தியா முழுவதும் பந்தயம் வைத்து, பணம் செலுத்தி விளையாடும் அனைத்துவித ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளையும் தடை செய்வதற்கு மாநில அரசும், மத்திய அரசும் முயற்சிக்க வேண்டுமென அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

MUST READ