திருத்தணியில் நடைபெற்ற ஜாத்திரை விழாவில் நடனமாடிய கல்லுாரி மாணவியை அவரது பெற்றோர் கண்டித்தால், மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணிஅருகே ஜோதிநகர் ஜாத்திரை விழாவில் நடனமாடிய கல்லுாரி மாணவியை அவரது பெற்றோர் கண்டித்தால், மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார்.

திருத்தணி ஜோதிநகர் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார் மகள் காயத்திரி (19). இவர், திருத்தணி அரசு கலை கல்லுாரியில் பி.எஸ்.சி., கணினி அறிவியல் பிரிவு இரண்டாமாண்டு படித்துவந்தார்.
நேற்று முன்தினம் ஜோதி நகரில் உள்ள ரேணுகாம்பாள் தேவி கோவிலில் ஜாத்திரை விழா வெகு விமர்சையாக நடந்தது. இதில் இரவு சுவாமி ஊர்வலத்தின் போது குடும்பத்துடன் கலந்து கொண்டகாயத்திரி தெருவில் நடனமாடியதாக கூறப்படுகிறது. இதை கண்டதும் அவரது பெற்றோர் காயத்திரியை கண்டித்துள்ளனர். இதில் மனமுடைந்த கல்லுாரி மாணவி உடனடியாக அங்கிருந்து புறப்பட்டார். தொடர்ந்து வீட்டிற்கு சென்ற காயத்ரி வீட்டின் மின்விசிறியில் புடவையால் துாக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார்.
இதனையடுத்து பெற்றோர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது மகள் காயத்ரி மின்விசிறியில் சடலமாக தொங்குவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து போலீசாருக்கு கொடுத்த தகவலின் பெயரில் திருத்தணி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். ஊர் ஜாத்திரை திருவிழாவில் மகள் நடனமாடியதால் பெற்றோர் கண்டித்ததை அடுத்து மகள் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
25 ஆண்டுகளுக்கு பிறகு ஒன்றிணையும் பிரபுதேவா, வடிவேலு கூட்டணி!