spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஒரு நாகரிகச் சமநிலை உண்டாக்குவது காலத்தின் தேவையாக உள்ளது - கவிஞர் வைரமுத்து

ஒரு நாகரிகச் சமநிலை உண்டாக்குவது காலத்தின் தேவையாக உள்ளது – கவிஞர் வைரமுத்து

-

- Advertisement -

சென்னையில் சட்டம் சமூகம் ஊடகம் என்ற முக்கோணத்திற்கு இடையே ஒரு நாகரிகச் சமநிலை உண்டாக்குவது காலத்தின் தேவை என கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.ஒரு நாகரிகச் சமநிலை உண்டாக்குவது காலத்தின் தேவையாக உள்ளது - கவிஞர் வைரமுத்துமேலும், இது தொடர்பாக தனது எக்ஸ் பதிவில்,சமூக ஊடகங்கள் குறித்த
உச்ச நீதிமன்றத்தின்
நியாயமான கவலையை
நான் வழிமொழிகிறேன்
கருத்துச் சுதந்திரம்
என்ற பெயரால்
கேளிக்கை வேடிக்கை
என்ற பெயரால்
சமூக ஊடகத்தில்
யாரும் யாரையும்
காயப்படுத்துவதை
நியாயப்படுத்த முடியாது
சுதந்திரம் என்பது
கையில் இருக்கும் கத்தியை
அடுத்தவரின் கழுத்தில்
வைப்பதல்ல
அது
அரசமைப்புச் சட்டத்துக்கே
புறம்பானது
சமூக ஊடகங்களை
முறைப்படுத்த வேண்டும் என்று
அரசாங்கத்துக்கு
உச்ச நீதிமன்றம்
சுட்டிக் காட்டியிருப்பது
மனித உரிமையின்பால் உள்ள
மதிப்பாகும்
வரவேற்கிறேன்
சட்டம் சமூகம் ஊடகம்
என்ற முக்கோணத்திற்கிடையே
ஒரு நாகரிகச் சமநிலை
உண்டாக்கப்படுவது
காலத்தின் தேவையாகும் என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.

ஆட்டம் போட தயாரா மக்களே…. ‘ஜனநாயகன்’ ஃபர்ஸ்ட் சிங்கிள் அப்டேட் வந்தாச்சு!

MUST READ