- Advertisement -
கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லக் கண்ணு மேல் சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளாா்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு இரு தினங்களுக்கு முன் வீட்டில் நிலைத்தடுமாறி கீழே விழுந்து முகத்தில் காயம் ஏற்பட்டதன் காரணமாக கடந்த இரண்டு நாட்களாக நந்தனம் வெங்கடேஸ்வரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். தற்போது சற்று அதிகபடியான மூச்சுத் திணறல் ஏற்பட்டதால், ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை வார்டு எண் 133-ல் (அவசர சிகிச்சை பிரிவு) அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மூச்சு விடுவதற்கு சிரமமாக இருப்பதால் ஆக்ஸிஜன் செலுத்தப்பட்டு வருகிறது.
“நான் வருகிறேன்”… ராகுலுக்கு போன் போட்ட ஸ்டாலின்! நாடாளுமன்றத்தில் பயந்து ஓடிய மோடி!



