spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரை"நான் வருகிறேன்"... ராகுலுக்கு போன் போட்ட ஸ்டாலின்! நாடாளுமன்றத்தில் பயந்து ஓடிய மோடி!

“நான் வருகிறேன்”… ராகுலுக்கு போன் போட்ட ஸ்டாலின்! நாடாளுமன்றத்தில் பயந்து ஓடிய மோடி!

-

- Advertisement -

பீகாரில் ராகுல்காந்தி நடத்தும் யாத்திரையில் ஸ்டாலின் உள்ளிட்ட 5 மாநில முதலமைச்சர்கள் பங்கேற்பதன் மூலம், மோடி வீட்டிற்கு அனுப்பபடுவதற்கான காலம் நெருங்கிவிட்டதாகவே கருதுவதாக திராவிட இயக்க சிந்தனையாளர் வல்லம் பஷீர் தெரிவித்துள்ளார்.

we-r-hiring

பீகாரில் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டதற்கு எதிராக ராகுல்காந்தி நடத்தும் யாத்திரையில் 5 மாநில முதல்வர்கள் பங்கேற் உள்ளது தொடர்பாக திராவிட இயக்க சிந்தனையாளர் வல்லம் பஷீர் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது:- தேர்தல் ஆணையத்தின் வாக்கு திருட்டு மோசடிகளுக்கு எதிராக பீகாரில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி, ஆர்.ஜே.டி தலைவர் தேஜஸ்வி யாதவ் ஆகியோர் பேரணி நடத்திக் கொண்டிருக்கின்றனர். தற்போது ராகுல்காந்தியின் பேரணியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கர்நாடக முதல்வர் சித்தராமையா, தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையின் மூலம் நாட்டின் ஒட்டுமொத்த கவனத்தையும் ராகுல்காந்தி தன்பக்கம் திருப்பியுள்ளார் என்பதுதான் உண்மை. தேர்தல் ஆணையம் தன்னுடைய சுயசார்பை இழந்துவிட்டு, ஒருபக்க சார்புடன் செயல்படுவது என்பது இந்தியாவின் ஜனநாயகத்திற்கு பேராபத்தானது ஆகும். அந்த பேராபத்தை கடந்த 5 ஆண்டுகளாக பல்வேறு தேர்தல்களில், தேர்தல் ஆணையம் செய்திருக்கிறது என்று குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டுள்ளது. வீழ்த்த முடியாத பிம்பம் என்று வர்ணிக்கப்பட்ட மோடியை ஏற்கனவே வீத்தியாகிவிட்டது. அந்த பிம்பத்தை கட்டி, ஒட்டி வைத்த பெருமை இந்த தேர்தல் ஆணையத்திற்கு தான் இருக்கிறது.  அதற்கு உதாரணம் கர்நாடக மாநிலத்தில் ஒரு தொகுதியை கையில் எடுத்துக்கொண்டு ராகுல்காந்தி அம்பலப் படுத்திய விதம். மற்றொருபுறம் பீகார் மாநிலத்தில் ஒரே நாளில் 65 லட்சம் வாக்குகள் நீக்கப்படுகிறது. எதிர்க்கட்சி தலைவர் தேஜஸ்வியின் பெயரே வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறது.

உச்சநீதிமன்றத்தில் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டது தொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று தேர்தல் ஆணையம் சொல்கிறது. நாட்டின் எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி, தேர்தல் ஆணையத்தின் மீது ஒரு குற்றச்சாட்டை முன்வைத்தால், பாஜகவின் செய்தித்தொடர்பாளர் போன்று தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஸ்குமார் பேசுகிறார். ஏன் இப்படி பேசுகிறார் என்கிற சந்தேகம் இந்தியா முழுவதும் இழந்துள்ளது. தேர்தல் மீது நம்பிக்கை இல்லை என்றால் பதவியை ராஜினாமா செய்துவிட்டு போகச் சொல்கிறார்கள். அப்போது என்ன செய்ய வேண்டும் என்று இவர்கள் விரும்புகிறார்கள்? இத்தகைய சூழலில் ராகுல்காந்தி ஒரு பயணத்தை மேற்கொண்டுள்ளார். இதன் மூலம் முறைகேட்டில் ஈடுபட்ட தேர்தல் ஆணையத்தை அம்பலப்படுத்தாமல் விடமாட்டோம் என்கிற செய்தியை நாட்டு மக்களுக்கு சொல்கிறார். மற்றொன்று நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்கள் கைவிடப்படவில்லை. அவர்களுக்கு ஆதரவாக இந்தியா கூட்டணி இருக்கிறது. அவர்களை வாக்குச் சாவடிக்கு கொண்டுவந்து சேர்ப்பதுதான் தன்னுடைய தலையாய பணி என்று ராகுல்காந்தி களத்திற்கு வந்துவிட்டார்.

ஒட்டுமொத்த பிரச்சினையும் நாடு முழுவதும் பேசப் படுவதற்கு முன்னதாக ஒரே ஒரு குரல்தான் இதற்கு ஆதரவாக ஒழித்தது. அது தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் குரலாகும். தன்னுடைய நாடாளுமன்ற உறுப்பினர்களை வைத்து டெல்லியில் சண்டமாருதம் செய்தார். இன்றைக்கு இந்த முதலமைச்சர் அந்த பேரணியில் பங்கேற்க போகிறார். இந்தியாவினுடைய கவனம் தற்போது ராகுல்காந்தியின் பேரணியின் பக்கம் திரும்பியுள்ளது. ராகுல்காந்தியின் முந்தைய யாத்திரைகள் ஏற்படுத்திய தாக்கத்தைவிட இந்த யாத்திரை கூடுதல் தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறது. காரணம் பல்வேறு மாநில முதலமைச்சர்கள் வரிசைகட்டி நிற்கப் போகிறார்கள். இதன் மூலம் தேர்தல் ஆணையத்திற்கு மிகப்பெரிய நெருக்கடி வந்து சேர்ந்துள்ளது. தேர்தல் ஆணையத்திற்கு எதிராக ஒரு ஜனநாயக யுத்தத்தை ராகுல்காந்தி வடிவமைத்து விட்டார். இனி தேர்தல் ஆணையம் தப்ப முடியாது. மேலும் தேர்தல் ஆணையத்தை ஒரு கைப்பாவையாக கையில் எடுத்துக்கொண்டு இயங்கிய பாஜக, மோடி – அமித்ஷா கும்பல், நாட்டு மக்களிடம் பொதுமன்னிப்பு கேட்கிற நிலைமை வெகு விரைவில் வந்துவிடும். மோடி வீட்டிற்கு அனுப்பப்படுகிற காலம் அருகாமையில் வந்துவிட்டதாகவே நினைக்கிறேன். இது ஒரு புரட்சிக்கான வித்து. இதுவரை இப்படி ஒரு களம் இந்தியாவில் அமைந்தது இல்லை.

mk stalin rahul gandhi

புரட்சிகளால் தான் சர்வாதிகாரிகள் வீழ்த்தப்பட்டிருக்கிறார்கள். இந்த சர்வாதிகாரிக்கு எதிராகவும் புரட்சி வெடித்துவிட்டதாக தான் நான் பார்க்கிறேன். இது ஜனநாயகப் புரட்சி. மக்களை சந்திக்கிறார்கள். பாதிக்கப்பட்டவர்களின் பக்கம் நிற்கிறோம் என்கிற குரலை வெளிப்படுத்துகிறார்கள். நீக்கப்பட்ட 65 லட்சம் பேருக்கும் புதிய நம்பிக்கை பூத்திருக்கிறது. தேர்தல்களில் வாக்களிப்பதற்கான உரிமையை நாம் மீண்டும் பெறுவோம் என்கிற அந்த நம்பிக்கை, இந்தியாவில் மிகப்பெரிய மாற்றத்தை தரும். இப்படி ஒரு செயலை செய்த பிறகு இந்த தேர்தல் ஆணையம் யாருக்காக இயங்குகிறது? என்கிற கேள்வி எழுகிறது. இந்த கேள்வி நாடு முழுமைக்கும் எழுந்துவிட்டதாக தான் நினைக்கிறேன். இந்தியாவிலேயே வாக்குச் சாவடிகளுக்கு அதிக மக்கள் படையெடுத்துச் செல்லும் மாநிலமாக தமிழ்நாடு இருந்துள்ளது. கலவரங்கள் இல்லாமல் தேர்லை சந்தித்த மாநிலங்களில் தமிழ் நாட்டிற்கு முதலிடம் உண்டு. அப்படிபட்ட ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் இந்த யாத்திரையில் வந்து நிற்கிறார் என்றால்? இந்த ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டிய கரங்கள் வலுத்துவிட்டன. இனி மோடிக்கும், தேர்தல் ஆணையத்திற்கும் எச்சரிக்கை மணி அடிப்பது மட்டும் அல்ல. வாக்காளர் பட்டியல் முறைகேடுகளுக்கு இவர்கள் எல்லாம் நாட்டு  மக்களிடம் பதில் சொல்ல வேண்டிய நேரம் நெருங்கிவிட்டது.

Modi

மக்களிடத்தில் ஒரு கட்சி வரவேற்பை பெற்றுள்ளதா? என்பதற்கான அளவீடு என்பது தேர்தல்தான். தேர்தல் களத்தில்தான் ஒரு கட்சியை மக்கள் ஏற்றுக்கொண்டனரா? இல்லையா? என்பது தெரியும். கட்சிகள் எல்லாம் தேர்தலை நோக்கி தான் நகர்கின்றன. உலகத் தலைவர்களுக்கு எல்லாம் ஆலோசனை சொல்கிற பிரதமர் மோடி, தேர்தல் நேரத்தில் கஜினி முகமதுவை போல தமிழ்நாட்டிற்கு படையெடுத்து வருகிறார். குறிப்பாக தென் தமிழ்நாட்டிற்கு 3 முறை பயணம் மேற்கொண்டார். அதற்கு காரணம் வாக்காளன் கையில் இருக்கின்ற ஒற்றை வாக்கு, பிரதமரை இங்கே வந்து மண்டியிட வைத்தது. தற்போது நான் அளிக்கும் வாக்கு காணாமல் போய்விடுகிறது. என்னுடைய வாக்கு யாருக்கானது என்று கண்டறிவது தேர்தல் ஆணையத்தின் வேலையா? யார்? யாருக்கு வாக்களித்தார்கள் என்பதை தேர்தல் ஆணையம் உளவு பார்த்து, பாஜகவுக்கு எதிரான வாக்குகளை அப்புறப்படுத்திவிடும் என்று சொன்னால் இது எவ்வளவு பெரிய ஜனநாயக பேராபத்து என்பதை வாக்கு அரசியலை நம்பி இருக்கின்ற ஒவ்வொரு கட்சியும் உணர்ந்திருக்கிறது. தேர்தல் ஆணையத்தின் மீது ஒரு கொந்தளிப்பான மனநிலை அரசியல் கட்சிகளுக்கு ஏற்பட்டுள்ளது. அவர்களை பின்னால் இருந்து இயக்கிய மோடி மீது அவர்களுக்கு கொந்தளிப்பு வராதா? அந்த வேகம் தான், நாடாளுமன்றத்திற்கு வந்த பிரதமர் மோடியை நோக்கி, எதிர்க்கட்சி உறப்பினர்கள் வாக்கு திருடன் என்று முழக்கமிட்டனர், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ