spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்அரசியல்முடிவுக்கு வரும் 10 ஆண்டுகால கூட்டணி…தவெகவிற்கு அதரவு தெரிவித்த ஜனநாயக முஸ்லீம் மக்கள் கட்சி

முடிவுக்கு வரும் 10 ஆண்டுகால கூட்டணி…தவெகவிற்கு அதரவு தெரிவித்த ஜனநாயக முஸ்லீம் மக்கள் கட்சி

-

- Advertisement -

பாஜகவுடன் அதிமுக  தொடர்ந்து கூட்டணி அமைப்பதால் கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக கட்சியின் நிறுவனத் தலைவர் தமீம் அறிவித்துள்ளாா்.முடிவுக்கு வரும் 10 ஆண்டு கூட்டணி…தவெகவிற்கு அதரவு தெரிவித்த ஜனநாயக முஸ்லீம் மக்கள் கட்சி

10 ஆண்டுகளாக அதிமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து வந்த ஜனநாயக முஸ்லிம் மக்கள் கட்சி, அதிமுகவில் இருந்து வெளியேறி  தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு தருவதாக அறிவித்துள்ளது.

we-r-hiring

இதனை, தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஜனநாயக முஸ்லிம் மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் தமீம், ”2014- ல் இருந்து அரசியல் களத்தில் ஈடுபட்டு வரும் சிறிய கட்சியான ஜனநாயக முஸ்லிம் மக்கள் கட்சி,  சென்னை பனையூரில் உள்ள த.வெ.க தலைமை  அலுவலகத்தில்  பொதுசெயலாளர் என்.ஆனந்தை சந்தித்து தங்களது ஆதரவை தெரிவித்துள்ளனர். கடந்த 10 ஆண்டுகளாக அதிமுகவிற்கு ஆதரவு தெரிவித்து வந்த நிலையில், பாஜகவுடன் தொடர்ந்து கூட்டணி வைத்ததால் அதிமுக கூட்டணியில் இருந்து விலகி உள்ளோம்.10 ஆண்டு கூட்டணிக்கு முடிவு கட்டிய ஜனநாயக முஸ்லீம் மக்கள் கட்சி…த.வெ.க.விற்கு ஆதரவுமேலும் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு கொடுப்பதாக ஜனநாயக முஸ்லிம் மக்கள் கட்சி நிறுவனர் தமீம் செய்தியாளர்கள் சந்திப்பில் அறிவித்துள்ளாா். மேலும், தவெக தலைவர் விஜயை சந்திக்க நேரம் கேட்டுள்ளோம் விரைவில் அந்த சந்திப்பும் நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளாா்.

தாய், தந்தையர்க்கு இணையாக பாசம் காட்டிய அண்ணனை இழந்து விட்டேன்-முதல்வர் வருத்தம்…

MUST READ