spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாதென்னிந்திய ராணுவத்தின் புதிய தளபதி நியமனம்...யார் இந்த வி.ஸ்ரீஹரி?

தென்னிந்திய ராணுவத்தின் புதிய தளபதி நியமனம்…யார் இந்த வி.ஸ்ரீஹரி?

-

- Advertisement -

 

we-r-hiring

தென்னிந்திய பகுதிகளுக்கான புதிய ராணுவ தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல்      வி.ஸ்ரீஹரி, AVSM, SC, SM, பொறுப்பேற்கிறார். அவர் ஆகஸ்ட் 01, 2025 முதல் இப்பொறுப்பில் நீடிப்பார்.

இந்திய ராணுவத்தின் தென்னிந்திய பகுதி, தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலுங்கானா மாநிலங்களையும், புதுச்சேரி, லட்சத்தீவு ஆகிய இரண்டு யூனியன் பிரதேசங்களையும் கொண்டதாகும்.

இவர், கேரளாவின் மலப்புரம் மாவட்டம் வாண்டூர், நடுவத் என்ற கிராமத்தைச் சேர்ந்த மறைந்த ராணுவ வீரர் எம் வேலாயுதன் நாயர், திருமதி சுலோச்சனா நாயர் ஆகியோரின் மகன் ஆவார். அவர் அமராவதி நகர் சைனிக் பள்ளி, கடக்வாசலா தேசிய பாதுகாப்பு அகாடமி மற்றும் டேராடூனில் உள்ள இந்திய இராணுவ அகாடமி ஆகியவற்றின் முன்னாள் மாணவர் ஆவார். ஜூன் 13, 1987 அன்று புதிதாக்க உருவாக்கப்பட்ட 16 சீக்கிய இலகு காலாட்படை பட்டாலியனில் நியமிக்கப்பட்டார். இப்படைப்பிரிவு பின்னர் ஆகஸ்ட் 1992 இல் பாரா ரெஜிமென்ட்டாக மாற்றப்பட்டது.

லெப்டினன்ட் ஜெனரல் வி.ஸ்ரீஹரி ராணுவத்தின் பல்வேறு படைப்பிரிவுகளிலும், பயிற்றுவிக்கும் அமைப்புகளிலும் இதற்கு முன்பு பணியாற்றியுள்ளார். நாட்டின் வடக்கு, கிழக்கு மற்றும் தெற்கு பகுதிகளிலும், வெளிநாட்டில் ஐ.நா. மிஷனிலும் பணியாற்றிய அனுபவம் அவருக்கு உள்ளது. ஆபரேஷன் ரக்ஷக், சியாச்சின் பனிமலை முகாம், ஸ்ட்ரைக் படைப்பிரிவின் ஒரு காலாட்படை பிரிகேட், வடகிழக்கில் ஒரு மலைப் பிரிவு, ஒரு பாரா சிறப்புப் படை பட்டாலியன் ஆகியவற்றுக்கு அவர் தலைமை வகித்துள்ளார். பெல்காமில் உள்ள ஜூனியர் லீடர்ஸ் விங்கில் பயிற்றுவிப்பாளர் மற்றும் வெலிங்டனில் உள்ள பாதுகாப்பு அலுவலர்கள் பயிற்சி கல்லூரியில் முதுநிலை பயிற்றுவிப்பாளர் ஆகியவை அவரது பயிற்றுவிப்பு பணிகளில் அடங்கும்.

காங்கோ குடியரசில் ஐக்கிய நாடுகள் அமைப்பின் மிஷனில் ஒரு ஸ்டாஃப் ஆபீசர், ஜெனரல் ஸ்டாஃப் ஆபீசர் – 1, ராணுவ பயிற்சி – 16 (வெளிநாட்டு பயிற்சி) ஆகியவை அவரது பணியாளர் நியமனங்களில் அடங்கும். இந்தியாவில் புதிதாக உருவாக்கப்பட்ட ஒரு மலைப் பிரிவின் கர்னல் ஜெனரல் ஸ்டாஃப், இராணுவச் செயலக கிளையில் கர்னல் இராணுவச் செயலாளர் – 1, அசாம் ரைபிள்ஸ் இயக்குநரக துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல் (பணியாளர்), மேஜர் ஜெனரல் (பொது ஊழியர்கள்) தலைமையகம் கிழக்கு ஆணையகம், பாதுகாப்பு அமைச்சக (இராணுவம்) ஒருங்கிணைந்த தலைமையகத்தில் ஆட்சேர்ப்பு மற்றும் மனிதவள திட்டமிடல் பிரிவுகளுக்கும் தலைமை வகித்துள்ளார்.

சென்னை பல்கலைக்கழகத்தில் எம்.எஸ்சி பாதுகாப்பு மற்றும் வியூகவியல் பட்டம், உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் மேலாண்மை படிப்பில் முதுகலை மற்றும் சென்னை பல்கலைக்கழகத்தில் எம்.பி.எல். பட்டம் ஆகியவற்றை அவர் பெற்றுள்ளார்.

31 ராஷ்ட்ரிய ரைபிள்ஸ் (கமாண்டோ) பிரிவில் பணியாற்றியபோது 1998 ஆம் ஆண்டு சௌர்ய சக்ரா விருதும், 2021 ஆம் ஆண்டு தனது பிரிவின் கட்டளைக்காக சேனா பதக்கம் (சிறப்புமிக்க சேவைகள்) மற்றும் 2023 ஆம் ஆண்டு அதி விஷிஷ்ட் சேவா பதக்கமும் பெற்றுள்ளார். 2009 ஆம் ஆண்டு ஒருங்கிணைந்த பணியாளர் குழுவின் பாராட்டு அட்டை மற்றும் 2013 ஆம் ஆண்டு ராணுவத் தலைமைத் தளபதி பாராட்டு அட்டையையும் பெற்றுள்ளார்.

அவரது மனைவி திருமதி உமா ஸ்ரீஹரி ஒரு இல்லத்தரசி. இந்த தம்பதியருக்கு புதுச்சேரியில் பணிபுரியும் வேதிகா ஸ்ரீஹரி என்ற மகள் உள்ளார்.

பிஎஸ்என்எல் சொத்துக்கள் விற்பனை – ஊழியர்கள் எதிர்காலங்கள் பாதிக்கப்படாது என தகவல்

MUST READ