spot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுபிஎஸ்என்எல் சொத்துக்கள் விற்பனை - ஊழியர்கள் எதிர்காலங்கள் பாதிக்கப்படாது என தகவல்

பிஎஸ்என்எல் சொத்துக்கள் விற்பனை – ஊழியர்கள் எதிர்காலங்கள் பாதிக்கப்படாது என தகவல்

-

- Advertisement -

பிஎஸ்என்எல் சொத்துக்கள் விற்பனை - ஊழியர்கள் எதிர்காலங்கள் பாதிக்கப்படாது என தகவல்

பிஎஸ்என்எல் [BSNL] நிறுவனத்திற்கு சொந்தமான 1,341 கோடி நில சொத்துக்களை மத்திய அரசு 2019ம் ஆண்டு முதல் விற்பனை செய்தது. தமிழகத்தில் மட்டும் 300 கோடி ரூபாய் சொத்துக்களை பிஎஸ்என்எல் விற்பனை செய்துள்ளது.

we-r-hiring

நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் உறுப்பினர் அசோக் சிங் என்பவர் மத்திய அரசு BSNL மற்றும் MTNL நிறுவனங்களில் நிலங்களை விற்பனை செய்வது குறித்தும், இதற்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இலக்க குறித்தும் எழுத்துப்பூர்வமாக கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு மத்திய தொலைதொடர்புத் துறை இணை அமைச்சர் பெம்மாசாணி சந்திரசேகர், 2019ம் ஆண்டு முதல் பி.எஸ்.என்.எல் நிறுவனத்திற்கு சொந்தமான நில சொத்துக்களை பணமாக்கும் திட்டத்தின் கீழ் 25 நில சொத்துக்கள் 1,341 கோடி ரூபாய் அளவுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதில், தமிழகத்தில் மட்டும் கோவை, சென்னை, திருச்சி உள்ளிட்ட இடங்களில் இருந்த 300 கோடி மதிப்புள்ள நில சொத்துக்களை விற்பனை செய்து பணமாக்கி உள்ளதாக கூறியுள்ளார்.

நடப்பு நிதியாண்டில் பி.எஸ்.என்.எல் நிறுவனத்திற்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இலக்கு 900 கோடி எனக் கூறியுள்ள மத்திய இணை அமைச்சர், MTNL நிறுவனத்தின் சொத்துக்கள் இதுவரை விற்கப்படவில்லை என்றும், BSNL நிறுவனத்தின் சொத்துக்கள் விற்பனை செய்யப்படுவதால் BSNL நிறுவனத்தின் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் எதிர்காலங்கள் பாதிக்கப்படாது எனவும் தெரிவித்துள்ளார்.

போக்குவரத்துத் துறை ஊழியர்களுக்கு கருணை வேலைவாய்ப்பு: சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

MUST READ