சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்றுடன் திரைத்துறையில் 50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார்.கடந்த 1975 ஆம் ஆண்டு அபூர்வராகங்கள் படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்த ஒருவரை இன்று கோடான கோடி ரசிகர்கள் தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வணங்குகிறார்கள். ஆரம்பத்தில் பஸ் கண்டக்டராக விசில் அடித்த ரஜினிக்கு இன்று உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் விசில் அடித்து கொண்டாடுவார்கள் என்று யாரும் நினைத்துக் கூட பார்த்திருக்க மாட்டார்கள்.
அந்த அளவிற்கு சிகரெட் பிடிக்கும் ஸ்டைல், வேகமான பேச்சு என தனது திறமைகளை வெளிகாட்டி இன்று இளம் நடிகர்களுக்கும் டஃப் கொடுக்கும் மகா நடிகனாக வலம் வருகிறார் ரஜினிகாந்த். இவர் கடந்து வந்த பாதை, பயணம், சவால்கள் என அனைத்தும் ஒரு அற்புதமான வரலாறாக மாறி உள்ளது. தொட்டதெல்லாம் வெற்றி மட்டுமல்ல அசுர வெற்றியை அடைந்தார் ரஜினி.
பாக்ஸ் ஆபீஸ் மன்னனாக, மாஸ் மன்னனாக, தலைவனாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவராலும் கொண்டாடப்படுகிறார். அதாவது ரஜினி என்ற பெயர் சொன்னால் நடிகர் என்பதைத் தாண்டி மக்கள் மனதில் உணர்வுபூர்வமாகவும் கலந்து விட்டார். இவர் இன்றுடன் (ஆகஸ்ட் 15) திரைத் துறையில் 50 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறார். இவருடைய 50 ஆண்டுகால திரைப்பயணம் ஒரு பொற்காலமாக பார்க்கப்படுகிறது.
ரஜினியின் கடின உழைப்பும், விடாமுயற்சியும் நம் ஒவ்வொருவருக்கும் கடினமாக உழைத்தால் நிச்சயம் உச்சியை தொடலாம் என்ற நம்பிக்கையை உண்டாக்குகிறது. இவ்வாறு ஒவ்வொருவருக்கும் இன்ஸ்பிரேஷனாக விளங்கும் ரஜினிக்கு, இந்நாளில் ரசிகர்களும், திரைப் பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து மகிழ்வதை போல் நாமும் அவருடைய ஸ்டைல், மாஸ் என அனைத்தும் தொடர வேண்டும் என வாழ்த்துவோம்.
- Advertisement -