மதராஸி படம் குறித்து ஏ.ஆர். முருகதாஸ் பேசியுள்ளார்.
தமிழ் சினிமாவில் தற்போது தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் வெளியான அமரன் திரைப்படம் இவருடைய கேரியரில் மிகவும் முக்கியமான படமாக அமைந்து மாபெரும் வெற்றியைப் பெற்றுத் தந்துள்ளது. எனவே சிவகார்த்திகேயனின் அடுத்தடுத்த படங்களின் மீதான எதிர்பார்ப்பும் மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. ஏற்கனவே சிவகார்த்திகேயன் ‘பராசக்தி’ படத்தில் நடித்து வரும் நிலையில் இன்னும் சில படங்களை கைவசம் வைத்திருக்கிறார்.
இதற்கிடையில் இவர், பிரபல இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தனது 23வது திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்திற்கு மதராஸி என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ருக்மிணி வசந்த் நடித்திருக்கிறார். மேலும் விக்ராந்த், வித்யூத் ஜம்வால், பிஜு மேனன், டான்சிங் ரோஸ் சபீர் ஆகியோர் நடித்துள்ளனர். ஸ்ரீ லட்சுமி மூவிஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க அனிருத் இதற்கு இசை அமைக்கிறார். ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்த நிலையில் படத்தில் இருந்து போஸ்டர்கள், கிளிம்ப்ஸ், முதல் பாடல் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
எனவே வருகின்ற செப்டம்பர் 5ஆம் தேதி உலகம் முழுவதும் திரைக்கு வர முழு வீச்சில் தயாராகி வரும் மதராஸி படத்தைக் காண ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்துக்கொண்டிருக்கின்றனர். அது மட்டும் இல்லாமல் ஏ.ஆர். முருகதாஸ், சிவகார்த்திகேயனை எந்த மாதிரியான பரிமாணத்தில் காட்டி இருப்பார் என்ற எதிர்பார்ப்பும் இருக்கிறது. இந்நிலையில் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் ஏ.ஆர். முருகதாஸ், மதராஸி படம் குறித்து பேசி உள்ளார்.
#ARMurugadoss Recent Interview
Q: What kind of movie is #Madharaasi…?
ARM : Action is a love story, and how love drives action.
– This will be a #Ghajini-like story.#Sivakarthikeyan | #Parasakthi
pic.twitter.com/hAw7QOhUUY— Movie Tamil (@MovieTamil4) August 15, 2025

அதன்படி அவர், “காதல் எப்படி ஒரு மிகப்பெரிய அக்க்ஷனை இயக்குகிறது என்பதுதான் மதராஸி படத்தின் கதை. கஜினி படத்தை போல் இது ஒரு பழிவாங்கும் கதை தான். ஆனால் இதில் காதல்தான் மையக்கரு. இந்த படம் சிவகார்த்திகேயனுக்கு அடுத்த கட்ட படமாக இருக்கும். படத்தில் காதல், நகைச்சுவை காட்சிகள் உள்ளன. இந்த படம் சிறப்பாக வந்திருக்கிறது. தற்போது கிராபிக்ஸ் பணிகள், பின்னணி இசை பணிகள் நடைபெற்று வருகின்றன” என்று தெரிவித்துள்ளார்.


