AK 64 படம் குறித்த லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் குட் பேட் அக்லி திரைப்படம் வெளியானது. இந்த படம் ஜெனரல் ஆடியன்ஸ் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் அஜித் ரசிகர்களுக்கு தரமான விருந்து படைத்தது. அந்த அளவிற்கு ஃபேன் பாயாக படத்தை செதுக்கியிருந்தார் ஆதிக். இதன்பிறகு அஜித்தின் 64வது படத்தையும் ஆதிக் ரவிச்சந்திரன் தான் இயக்கப் போகிறார் என்றும் அந்த படத்திற்கு அனிருத் இசை அமைக்கப் போகிறார் என்றும் பல பேச்சுகள் அடிபடுகின்றன. அதேசமயம் அஜித் தற்போது கார் ரேஸிங்கில் பிஸியாக இருப்பதால் 2025 நவம்பர் மாதத்தில் தன்னுடைய அடுத்த படத்தை தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அஜித்தின் அடுத்த படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் திரைக்கு வரும் எனவும் ஏற்கனவே அஜித் அப்டேட் கொடுத்திருந்தார். இந்நிலையில் அஜித்தின் AK 64 படம் குறித்த புதிய அப்டேட் வெளிவந்துள்ளது. அதாவது அஜித், ஆதிக் ரவிச்சந்திரனிடம், “எனக்காக கதை எழுத வேண்டாம். உன்னுடைய கதையில் நான் இருக்க விரும்புகிறேன்” என்று கூறியுள்ளாராம். மேலும் குட் பேட் அக்லி திரைப்படம் ரசிகர்களுக்காக எடுக்கப்பட்ட படமாக இருந்த நிலையில் அஜித் – ஆதிக்கின் அடுத்த படம் அனைவரும் ரசிக்கக்கூடிய நல்ல பொழுது போக்கு படமாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. இந்த தகவல் ரசிகர்களுக்கு படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி இருக்கிறது. எனவே இனிவரும் நாட்களில் இப்படம் தொடர்பான அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகும் என நம்பப்படுகிறது.