இட்லி கடை படத்தின் ஆடியோ லான்ச் தள்ளிப்போவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வரும் தனுஷ் தற்போது ஏகப்பட்ட படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். அதே சமயம் இட்லி கடை எனும் திரைப்படத்தை தானே இயக்கி நடித்து முடித்துள்ளார். இதில் தனுஷுடன் இணைந்து நித்யாமேனன், அருண் விஜய், ராஜ் கிரண், சத்யராஜ், பார்த்திபன் மற்றும் பலர் நடித்துள்ளனர். இதனை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க ஜி.வி. பிரகாஷ் இதற்கு இசையமைத்துள்ளார். கிரண் கௌஷிக் இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்திருக்கிறார். இந்த படம் வருகின்ற அக்டோபர் 1ஆம் தேதி உலகம் முழுவதும் திரைக்கு வர இருக்கிறது. அதற்கான வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. மேலும் இப்படம் எந்த மாதிரியான கதைக்களமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது.
இந்நிலையில் தான் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா 2025 செப்டம்பர் 13ஆம் தேதி சென்னை, நேரு அரங்கத்தில் நடைபெற இருப்பதாக தகவல் வெளியானது. ஆனால் தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால், இதே தேதியில் இளையராஜாவின் சிம்பொனி இசை கச்சேரி நடைபெற இருப்பதாக சொல்லப்படுகிறது. இதன் காரணமாக இட்லி கடை படத்தின் இசை வெளியீட்டு விழா ஒத்திவைக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் கசிந்துள்ளன. இருப்பினும் மற்ற அப்டேட்டுகள் அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


