spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைகாந்திமதி IN அன்புமணி OUT! கொதித்த அய்யநாதன்!

காந்திமதி IN அன்புமணி OUT! கொதித்த அய்யநாதன்!

-

- Advertisement -

ராமதாஸ் நடத்திய பாமக பொதுக்குழுவில் புதிய தலைவர் நியமிக்கப்படாதது, அன்பு கூட்டிய பொதுக்குழு செல்லாதது என்று அறிவிக்காதது போன்றவை அவர் எதிர் தரப்பினர் மீது நடவடிக்கை எடுக்க விரும்பவில்லை என்பதை காட்டுவதாக மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் தெரிவித்துள்ளார்.

we-r-hiring

மருத்துவர் ராமதாஸ் கூட்டிய பாமக பொதுக்குழு கூட்டம் குறித்தும், அன்புமணி ராமதாசின் அடுத்தக்கட்ட நகர்வுகள் குறித்தும் மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் பிரபல யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:- பாமக சிறப்பு பொதுக்குழு கூட்டத்தை ராமதாஸ் நடத்தியுள்ளார். பாமக கட்சி யாரிடம் உள்ளது? யார் தலைவர்? என்று தொண்டர்கள் முதல் பொதுமக்கள் வரை உள்ள கேள்விக்கு பதில் காண்பதற்காக நடைபெற்ற ஒரு முயற்சி தான் சிறப்பு பொதுக்குழு. அதில் ராமதாஸ் தன்னுடைய பலத்தை காண்பித்துள்ளார். அதில் போட்ட தீர்மானங்கள், அதிகாரம் தன்னிடம் தான் உள்ளது என்று காண்பித்துள்ளார். ஆனால் இதில் ஒரு அடிப்படையான கேள்வி எழுகிறது. கட்சியில் அன்புமணியின் நிலை என்ன? அன்புமணியை தலைவர் பதவியில் இருந்து ராமதாஸ் நீக்கிவிட்டார். பாமகவில் தலைவர் மற்றும் நிறுவனர் ராமதாஸ் தான் என்பதை பொதுக்குழு கூட்டம் மூலம் உறுதி செய்துவிட்டார். ஆனால் அன்புமணியை செயல் தலைவராக அறிவித்தார். அந்த பதவி தற்போது உள்ளதா? இல்லையா?. பொதுக்குழுவில் கட்சிக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டோர் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து எதுவும் சொல்லவில்லை. அப்போது அன்புமணியை கட்சியில் இருந்து முழுமையாக வெட்டிவிடவில்லை.

அண்மையில் ராமதாஸ் மனைவியின் பிறந்தநாளின்போது அன்புமணி மற்றும் அவரது குடும்பத்தினர் நேரில் சென்று கேக் வெட்டி கொண்டாடினர். இதனை பார்க்கும்போது ராமதாஸ் – அன்புமணி ஆகியோர் எந்த நேரத்திலும் சேர்ந்துவிடுவார்கள் என்கிற எண்ணம் ஏற்படுகிறது. பாமகவே குடும்ப ரீதியாக செல்கிறது. பாமக சிறப்பு பொதுக்குழுவிலும் தன்னுடைய மகளை முன்னிலைப் படுத்துகிறார். ராமதாஸ் எந்த தவறை செய்து கண்ணீர் சிந்தும் நிலைக்கு வந்தாரோ? மீண்டும் அதே தவறை செய்கிறார். அப்போது கட்சிக்கு உங்கள் குடும்பத்தில் இருந்து வருவது தான் சரியாக இருக்கும் என்று நினைக்கிறீர்களா? கவுரவ தலைவராக உள்ள ஜி.கே.மணி போன்றவர்கள் அப்படியே உள்ளனர். ஆனால் ராமதாஸ் குடும்பத்தில் உள்ளவர்கள் இரண்டாவது இடத்தில் வந்து உட்கார்ந்து கொள்கிறார்கள். அதற்கு காரணம் அவர்களின் பிறப்பு. ஜனநாயக அரசியலில் உள்ளவரும், பெரும் சமுதாயத்தின் தலைவருமாகிய ராமதாஸ், அந்த சமுதாயத்தில் உள்ளவர்கள் யாருக்கும் தகுதி இல்லை என்று நினைக்கிறாரா? இவர் அன்புமணி இடத்தில் தன்னுடைய மகள் காந்திமதியை தான் கொண்டுவரப் போகிறார் என்பது தெரிகிறது.

கட்சி யாரிடம் உள்ளது என்கிற கேள்விக்கு மக்கள் தான் பதில் சொல்ல வேண்டும். ஆனால் கள எதார்த்தம் ராமதாசிடம் தான் கட்சி உள்ளது. பாமகவின் விதிமுறைகளின் படி நாங்கள் செய்தோம் என்று அன்புமணி தரப்பு வழக்கறிஞர் பாலு சொல்கிறார். தேர்தல் ஆணையத்தில் அதன்படி தான் ஆவணங்களை வழங்கியுள்ளார். எனவே பாமகவை அன்புமணி, ராமதாஸ் என்று இரு அணிகளாக தேர்தல் ஆணையம் அறிவிக்கும் வாய்ப்பு உள்ளது. அன்புமணி தரப்பு மீது ராமதாஸ் எடுத்த நடவடிக்கைகள் உண்மை என்றால்? இன்றைக் கூட்டப்பட்ட பொதுக்குழுவில் பாமகவின் தலைவராக மற்றொருவரை கொண்டு வந்திருக்க வேண்டும். அன்புமணியை நீக்கி இருக்க வேண்டும். அவர் நடத்திய பொதுக்குழுவை செல்லாது என்று அறிவித்திருக்க வேண்டும். இதனை ராமதாஸ் செய்யாததால், என்றைக்கு இருந்தாலும் அன்புமணி தான் பாமகவின் தலைவராக வருவார் என்று சொல்வது போல உள்ளது.

அரசியல் போக்குகள் தான் பாமக எந்த கூட்டணியில் சேரும் என்பது தெரியவரும். பாமக இரு பிரிவுகளாக பிரியும்போது, அன்புமணி என்.டி.ஏ கூட்டணியில் தொடர்வார். ராமதாசும் அதிகாரத்தை விரும்புகிறார். ஆனால் மக்களை விட்டுவிடக்கூடாது என்று நினைக்கிறார். அன்புமணி கட்சியில் திணிக்கப்பட்டவர். அன்புமணியின் செல்வாக்கு என்பது பாமக, ராமதாசுடன் சேர்ந்ததாகும். ராமதாசின் நிலையே இன்றைக்கு பலவீனமாக தான் உள்ளது. பாமக பொதுக்குழுவில் யாரையும் நீக்கவோ, நடவடிக்கை எடுக்கவோ இல்லை. எதிர்வரும் காலத்தில் உள்ள முன்னேற்றங்களை வைத்து அவரை தள்ளிவிட்டு விடலாம் என்று நினைக்கிறார். காந்திமதியை மேடையில் அமர வைத்தது வெற்றி என்று மீண்டும் மீண்டும் காட்டி ஒப்புக்கொள்ள வைப்பதாகும். பாமக விதிகளின் படி நிறுவனர், தலைவராக முடியுமா? என்பது பிரச்சினைக்கு உரியதாகும். அன்புமணி தரப்பில், பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன், பாலு போன்றவர்கள் உள்ளனர். அவர்கள் இந்த வேலையை தான் செய்வார்கள்.

மிரட்டும் புயல்-சென்னை வாழ் மக்களுக்கு பாதுகாப்பு நடவடிக்கை தேவை

அன்புமணியின் அடுத்தக்கட்ட நடவடிக்கை என்பது, ராமதாஸ் தரப்பு கூட்டிய பொதுக்குழு செல்லாது என்றுதான் சொல்வார்கள். தேர்தல் ஆணையத்திற்கு செல்கிறபோது இந்த பிரச்சினை தீர்ந்துவிடும். காரணம் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த வேண்டி உள்ளது. இருவரும் போராட்ட அறிவிப்பை வெளியிட உள்ளனர். – ராமதாஸ் – அன்புமணி மோதலுக்கு இடையே வட மாவட்டங்களில் அதிமுக தங்களுடைய வாக்கு வங்கியை தக்கவைத்துக் கொள்வார்கள். எடப்பாடி பழனிசாமியின் நடவடிக்கையால் இழந்தவற்றை தவிர தங்களுடைய வாக்குகளை தக்க வைத்துக்கொள்வார்கள். திமுக வட மாவட்டங்களில் வலிமையாகவே உள்ளது. விசிக போன்ற கூட்டணி கட்சிகள் அங்கே வலிமையாக இருக்கிறது. பாமக, பாஜக உடன் கூட்டணி சேர்ந்து நம்ப தன்மையை இழந்திருக்கிறார். தற்போது அந்த நம்பத் தன்மையை மீட்டு எடுக்கக்கூடிய நடவடிக்கைகளில் ராமதாஸ் செயல்படுவாரா? அவர்களுக்கு இருக்கும் விஷயம் 10.5 சதவீதமாகும். ராமதாசுக்கு குறிப்பிட்ட வாக்குகள் களத்தில் இருக்கும். ஆனால் அதை வெற்றிக்கான வாக்குகளாக மாற்றுவது சந்தேகம் தான், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ