spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாமற்றவர்கள் பொழுதுபோக்குக்காக படம் எடுக்குறாங்க.... ஆனா தமிழ் இயக்குனர்கள்.... ஏ.ஆர். முருகதாஸ் பேச்சு!

மற்றவர்கள் பொழுதுபோக்குக்காக படம் எடுக்குறாங்க…. ஆனா தமிழ் இயக்குனர்கள்…. ஏ.ஆர். முருகதாஸ் பேச்சு!

-

- Advertisement -

பிரபல இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் தமிழ் இயக்குனர்கள் குறித்து பேசி உள்ளார்.
மற்றவர்கள் பொழுதுபோக்குக்காக படம் எடுக்குறாங்க.... ஆனா தமிழ் இயக்குனர்கள்.... ஏ.ஆர். முருகதாஸ் பேச்சு!

இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட வெற்றி படங்களை கொடுத்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். இவர் தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘மதராஸி’ எனும் திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த படம் 2025 செப்டம்பர் 5ஆம் தேதி திரைக்கு வர தயாராகி வருகிறது. இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்து தற்போது ப்ரோமோஷன் பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.மற்றவர்கள் பொழுதுபோக்குக்காக படம் எடுக்குறாங்க.... ஆனா தமிழ் இயக்குனர்கள்.... ஏ.ஆர். முருகதாஸ் பேச்சு! அதன்படி ப்ரோமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது ஏ.ஆர். முருகதாஸிடம், “இயக்குனர் சங்கருக்கு ‘இந்தியன் 2’ மற்றும் ‘கேம் சேஞ்சர்’ தோல்வி அடைந்தது. மணிரத்தினத்துக்கு ‘தக் லைஃப்’ தோல்வி அடைந்தது. இவ்வளவு பெரிய ஜாம்பவான்களுக்கு சருக்குவது உங்களுக்கு ஏதேனும் பதட்டத்தையும் பயத்தையும் கொடுத்திருக்கிறதா?” என்று கேள்வி எழுப்பப்பட்டது.

we-r-hiring

அதற்கு ஏ.ஆர். முருகதாஸ், “மணிரத்னம் மற்றும் சங்கர் ஆகிய இருவரும் மிகப்பெரிய இயக்குனர்கள். சில தோல்விகளை வைத்து அவர்களை எடை போட்டு விட முடியாது. இவர்களுடைய படத்தில் நல்ல மெசேஜ் இருக்கும். மற்ற இயக்குனர்கள் பொழுதுபோக்கிற்காக மட்டுமே படம் எடுக்கிறார்கள். ஆனால் தமிழ் இயக்குனர்கள் ஜனங்களுக்கு கற்றுக் கொடுக்கிறார்கள்” என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

MUST READ