ரஜினி – கமல் ஆகிய இருவரும் இணைந்து கேங்ஸ்டர் கதையில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகிய இருவரும் தமிழ் சினிமாவின் இரு பெரும் நடிப்பு ஜாம்பவான்களாக வலம் வருகின்றனர். அதாவது 70 வயதை கடந்தும் இளம் நடிகர்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் நடித்து அசத்தி வருகின்றனர். இருவரும் இணைந்து அன்று முதல் இன்று வரை தமிழ் சினிமாவின் கண்களாக திகழ்வதோடு மட்டுமல்லாமல் தமிழ் சினிமாவின் பெருமையை உலகிற்கு காட்டி வருகின்றனர். இருவரும் இணைந்து ஏற்கனவே பல வருடங்களுக்கு முன்பாக அபூர்வ ராகங்கள், 16 வயதினிலே, இளமை ஊஞ்சலாடுகிறது போன்ற படங்களில் நடித்திருந்தனர். அதன் பிறகு இருவரும் தனித்தனி வழிகளில் பயணித்தாலும் இருவரும் மீண்டும் இணைந்து நடிக்க வேண்டும் என்ற ஆசை ரசிகர்களுக்கு இருக்கிறது. அதன்படி தற்போது ரஜினி – கமல் இருவரும் இணைந்து கேங்ஸ்டர் கதையில் நடிக்க இருக்கின்றனராம். இதனை லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளதாகவும் இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.அதாவது இந்த திட்டமானது ஏற்கனவே கொரோனா காலக்கட்டத்தில் நடக்க இருந்ததாகவும் தற்போது இந்த திட்டம் பேச்சுவார்த்தையில் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இந்த தகவல் ரஜினி மற்றும் கமல் ரசிகர்களுக்கு படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி உள்ளது. மேலும் இந்த தகவல் உண்மையாகும் பட்சத்தில் இரண்டு ஜாம்பவான்களின் ரசிகர்களும் அதனை கொண்டாடி தீர்த்து விடுவார்கள் என்பதை சந்தேகமே இல்லை. இருப்பினும் இனிவரும் நாட்களில் இது தொடர்பான மற்ற அப்டேட்கள் வெளியாகும் என நம்பப்படுகிறது.