ஜெமினி கணேசனின் மகள் கமலா செல்வராஜ், நடிகை சாவித்ரி குறித்து பேசி உள்ளார்.
1970, 80 காலகட்டத்தில் காதல் மன்னனாக வலம் வந்தவர் ஜெமினி கணேசன். அந்த காலத்தில் எம்.ஜி.ஆரும், சிவாஜியும் தமிழ் சினிமாவில் கோலாட்சி செய்த காலத்தில் காதல் படங்களினால் தனி சாம்ராஜ்யத்தையே நடத்தியவர் ஜெமினி கணேசன். தமிழ் மொழி மட்டுமில்லாமல் மலையாளம், தெலுங்கு, இந்தி, கன்னடம் என 200க்கும் அதிகமான படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். அதேபோல் நடிகை சாவித்ரியும் தனது விடாமுயற்சியால் தனக்கென தனி ஒரு அடையாளத்தை உருவாக்கி, நடிகையர் திலகம் என்ற பட்டம் பெற்று, எம்.ஜி.ஆர், சிவாஜி மட்டும் இல்லாமல் ஜெமினி கணேசன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து மகா நடிகையாக மாறினார்.
ஒரு கட்டத்தில் ஜெமினி கணேசன் ஏற்கனவே திருமணமானவர் என்று தெரிந்தும் அவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் சாவித்ரி. அதன் பிறகு துரோகம், உடல் நலக்குறைவு என சாவித்ரியின் கடைசி காலம் துரதிர்ஷ்டவசமாக அமைந்தது. இந்நிலையில் நடிகர் ஜெமினி கணேசனின் மகள் கமலா செல்வராஜ் பேட்டி ஒன்றில் சாவித்ரி குறித்து பேசி உள்ளார். அதன்படி அவர், “ஒரு ராத்திரி கொட்டுகின்ற மழையில் எங்கள் வீட்டிற்கு வந்த சாவித்ரி கெட்டுப்போக கூடாது என்று தாலி கட்டி அந்தஸ்து கொடுத்தார் என் அப்பா. அவருக்கு தமிழே பேச தெரியாது. கையெழுத்து போட கத்து கொடுத்து, கார் ஓட்ட சொல்லிக் கொடுத்து கௌரவமாக வாழ வைத்தார்.
ஆனால் அவ திருமணமாகி இரண்டு பசங்க இருக்கிறது என்று தெரிந்தும் என் அப்பாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அதன் பிறகு எங்க அப்பாவை மிரட்டி கிட்டத்தட்ட 15 வருடங்கள் எங்கள் வீட்டிற்கு வரவிடாமல் செய்தார். எங்களின் குடும்பத்தையே கெடுத்தவ சாவித்ரி” என்று ஆதங்கமாக பேசியுள்ளார்.
15 வருஷம் என் அப்பாவ மிரட்டி… எங்க குடும்பத்தையே கெடுத்தவ சாவித்ரி… ஜெமினி கணேசன் மகள் ஆதங்கம்!
-
- Advertisement -