லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி – கமல் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் டிரெண்டிங் இயக்குனராக வலம் வரும் லோகேஷ் கனகராஜ், ‘மாநகரம்’ படத்தின் மூலம் அறிமுகமாகி இருந்தாலும் கைதி திரைப்படம் தான் இவருக்கு நல்ல பெயரையும் புகழையும் பெற்று தந்தது. அதை தொடர்ந்து விஜய், கமல், ரஜினி என டாப் நடிகர்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் அடுத்தது அஜித்தை இயக்கவும் தயாராகி வருகிறார். இருப்பினும் ரசிகர்கள் பலரும் கைதி 2 படத்தை மிகவும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இந்த படம் ஒரு சில தவிர்க்க முடியாத காரணங்களால் தொடர்ந்து தள்ளிப்போய்க் கொண்டே இருக்கிறது. அடுத்த ஆண்டு ஜனவரி அல்லது பிப்ரவரி மாதத்திலாவது ‘கைதி 2’ திரைப்படம் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது வெளியாகும் தகவல் என்னவென்றால், லோகேஷ் கனகராஜ், ரஜினி – கமல் ஆகிய இருவரையும் வைத்து புதிய கேங்ஸ்டர் படத்தை இயக்கப் போகிறாராம். இந்த படமானது 2026ஆம் ஆண்டின் முதல் பாதியில் தொடங்க இருப்பதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே லோகேஷ் கனகராஜ் ஹீரோவாக, புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளார். இவ்வாறு லோகேஷ் அடுத்தடுத்த வேலைகளில் கமிட்டாகி வரும் நிலையில் ‘கைதி 2’ திரைப்படம் இன்னும் தள்ளிப்போகும் போல் தெரிகிறது. இந்த தகவல் கார்த்தி ரசிகர்களுக்கு சற்று அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.