சூர்யாவின் கருப்பு படம் குறித்த லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது.
சூர்யாவின் 45 வது திரைப்படமாக உருவாகி வரும் திரைப்படம் தான் கருப்பு. இந்த படத்தை ஆர் ஜே பாலாஜி இயக்க ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் படத்தை தயாரிக்கிறது. சாய் அபியங்கர் இதற்கு இசையமைக்கிறார். ஜிகே விஷ்ணு இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். இந்த படத்தில் சூர்யாவுடன் இணைந்து திரிஷா, நட்டி நட்ராஜ், யோகி பாபு, ஷிவதா, சுவாசிகா மற்றும் பலர் நடிக்கின்றனர். கடந்த மே மாதம் சூர்யாவின் நடிப்பில் வெளியான ‘ரெட்ரோ’ திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்பதால் அடுத்ததாக ‘கருப்பு’ படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. அதன்படி கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்த படத்தில் இருந்து வெளியான முன்னோட்ட வீடியோ ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. அடுத்தது இந்த படம் இந்த ஆண்டு தீபாவளி தினத்தை முன்னிட்டு திரைக்கு வரும் என ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் சமீபத்திய தகவலின்படி, இந்த படமானது 2026 பொங்கலுக்கு தான் வெளியாகும் என சொல்லப்படுகிறது. மேலும் இந்த படத்தின் ஓடிடி மற்றும் தொலைக்காட்சி உரிமம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகி வருகின்றன. இனிவரும் நாட்களில் மற்ற அப்டேட்டுகள் வெளியாகும் என நம்பப்படுகிறது.