நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் திருமணம் குறித்த கேள்விக்கு கலகலப்பாக பதில் அளித்துள்ளார்.
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் மானாட மயிலாட நிகழ்ச்சியின் மூலம் தனது திரை பயணத்தை தொடங்கி தற்போது வெள்ளித் திரையில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். அந்த வகையில் இவர் கடந்த 2010 இல் வெளியான ‘நீதானா அவன்’ படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமாகி அட்டகத்தி, காக்கா முட்டை, தர்மதுரை என அடுத்தடுத்த வெற்றி படங்களில் நடித்து பெயரையும் புகழையும் பெற்றார். இது தவிர கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளையும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். மேலும் இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் நகைக்கடை திறப்பு விழா ஒன்றில் கலந்து கொண்ட ஐஸ்வர்யா ராஜேஷிடம், பத்திரிகையாளர்கள் உங்களுக்கு திருமணம் எப்போது? என்று கேள்வி எழுப்பினர். அதற்கு ஐஸ்வர்யா ராஜேஷ், பத்திரிக்கையாளர்களிடம் கல்யாணம் பண்ணலாமா? வேண்டாமா? என்று பத்திரிகையாளர்களிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு அவர்கள் வேண்டாம் என்று கூற ஏன் நிறைய பேர் கல்யாணம் வேண்டாம் என்று சொல்கிறீர்கள்? என்று அவர்களிடம் கலகலப்பாக பேசிவிட்டு, “கண்டிப்பாக நான் கல்யாணம் பண்ணும் போது சொல்கிறேன். உங்களிடம் என் திருமணம் குறித்து சொல்வதற்கு நான் மிகவும் சந்தோஷப்படுகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.