நடிகை திரிஷா சமீபகாலமாக புதிய படங்களை நிராகரிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.நடிகை திரிஷா தமிழ் சினிமாவில் அமீர் இயக்கத்தில் வெளியான ‘மௌனம் பேசியதே’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதைத் தொடர்ந்து பல வெற்றி படங்களில் நடித்து தனக்கென தனி ஒரு அடையாளத்தை உருவாக்கிக் கொண்டார். அதன்படி கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கும் மேலாக ஸ்டார் அந்தஸ்துடன் வலம் வரும் திரிஷா தற்போது மீண்டும் விஜய், அஜித், சூர்யாவுடன் இணைந்து நடித்து வருகிறார்.
இது தவிர கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளையும் தேர்ந்தெடுத்து வருகிறார் திரிஷா. ஆனால் சமீபகாலமாக திரிஷா புதிய பட வாய்ப்புகளை நிராகரித்து வருகிறாராம். ஏனென்றால் கடந்த ஜூன் மாதம் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான ‘தக் லைஃப்’ திரைப்படத்தில் திரிஷாவின் கதாபாத்திரம் அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தினாலும் படம் வெளியான பின்னர் பல சர்ச்சைகளை சந்தித்தது மட்டுமல்லாமல் தோல்வி படமாகவும் அமைந்தது.
இதற்கிடையில் திரிஷா நடித்திருந்த ‘விடாமுயற்சி’ திரைப்படமும் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதன் காரணமாக தான் திரிஷா தற்போது எந்தவித புது படங்களிலும் கமிட் ஆகாமல் அதை நிராகரித்து வருகிறாராம். சூர்யாவுடன், திரிஷா நடிக்கும் ‘கருப்பு’ திரைப்படம் ரிலீஸான பின்னர் அந்தப் படத்திற்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து தான் இனி அடுத்தடுத்த படங்களில் நடிக்க முடிவு செய்துள்ளாராம் திரிஷா.
- Advertisement -