குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் 10-ம் வகுப்பு மாணவனை 8-ம் வகுப்பு மாணவன் கத்தியால் குத்திக்கொன்றதால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பத்தாம் வகுப்பு மாணவனை எட்டாம் வகுப்பு மாணவன் கத்தியால் குத்தி கொன்றதால் அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. மாணவன் கொலையை கண்டித்து அகமதாபாத்தில் பள்ளி முன் மாணவனின் உறவினர்கள், பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சில நாட்களுக்கு முன்பு மாணவா்களிடையே மோதல் ஏற்பட்டது. இதில் இரு மாணவா்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. முன்விரோதம் காரணமாக அகமதாபாத்தில் உள்ள கோப்ரா பகுதியில் 10-ம் வகுப்பு மாணவனை 8-ம் வகுப்பு மாணவன் பள்ளி வாயில் முன் கத்தியால் குத்திக் கொலை செய்ததாக கூறப்படுகிறது. இந்த கத்தி குத்தில் பலத்த காயம் அடைந்த மாணவனுக்கு மணி நகரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை அளித்துக் கொண்டிருந்த போதே 10-வகுப்பு பள்ளி மாணவன் உயிரிழந்தான்.
மாணவன் கொலை செய்யப்பட்டதை அடுத்து பள்ளியை பொதுமக்கள் சூறையாடினர். பள்ளி வகுப்பறைகளில் இருந்த பொருட்கள், கணினிகளை அடித்து நொறுக்கினர். பள்ளி வகுப்பறை ஜன்னல் கண்ணாடிகளை அடித்து உதைத்தனா். தனியார் பள்ளி முதல்வர், ஊழியர்களை பொதுமக்கள் சாரமாரியாக தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் பள்ளி வாகனங்களையும் பொது மக்கள் அடித்து நொறுக்கினா்.
புலியாகப் பாயும் கர்நாடக அரசும் பூனையாய் பதுங்கும் திமுக அரசும் – அன்புமணி விமர்சனம்!
