ராவணன் படத்தை தொடர்ந்து விக்ரம் – பிரித்விராஜ் ஆகிய இருவரும் மீண்டும் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
கடந்த 2010ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் ‘ராவணன்’ எனும் திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் விக்ரம், பிரித்விராஜ், ஐஸ்வர்யா ராய் ஆகியோர் நடித்திருந்தனர். படத்தில் விக்ரம், ஐஸ்வர்யா ராய் ஆகியோரின் நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டது. அதாவது ராமாயணத்தில் வரும் ராவணனை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படத்தில் ராவணன் கதாபாத்திரத்தை ஹீரோவாகவும் ராமன் கதாபாத்திரத்தை வில்லனாகவும் சித்தரித்துக் காட்டப்பட்டிருந்தது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த படத்தை தொடர்ந்து பல வருடங்கள் கழித்து விக்ரம் – பிரித்விராஜ் ஆகிய இருவரும் இணைந்து புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளதாக தகவல் கசிந்துள்ளது.

அதாவது கடந்த பல வருடங்களுக்கு முன்பாகவே நடிகர் பிரித்விராஜ் சுகுமாரன் ஐயப்பன் எனும் திரைப்படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகி இருந்தார். சங்கர் ராமகிருஷ்ணன் இயக்கும் இந்த படத்தை ஆகஸ்ட் சினிமாஸ் நிறுவனம் தயாரிப்பதாக அறிவிப்பும் வெளியானது. நடிகர் பிரித்விராஜ் இந்த படத்தில் ஐயப்பன் வேடத்தில் நடிப்பதாகவும் இப்படமானது ஐயப்பனின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட இருப்பதாகவும் தகவல் வெளியானது. அதன் பிறகு இப்படம் குறித்த தகவல்கள் வெளிவரவில்லை. இந்நிலையில் இந்த படத்தில் பிரித்விவிராஜுடன் இணைந்து நடிகர் விக்ரம் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக புதிய தகவல் கிடைத்துள்ளது. இனிவரும் நாட்களில் மற்ற அப்டேட்டுகள் வெளியாகும் என நம்பப்படுகிறது.