சசிகுமார் நடிக்கும் வதந்தி 2 வெப் தொடரில் இரண்டு கதாநாயகிகள் ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
கடந்த 2022 ஆம் ஆண்டு எஸ்.ஜே. சூர்யா, சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, நாசர், லைலா ஆகியோரின் நடிப்பில் ‘வதந்தி’ எனும் வெப் தொடர் வெளியானது. இந்த வெப் தொடரை புஷ்கர் – காயத்ரி தயாரிக்க ஆண்ட்ரூ லூயிஸ் இதனை இயக்கியிருந்தார். விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாத இந்த வெப் தொடர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அடுத்தது இந்த வெப் தொடரின் இரண்டாவது சீசனுக்காக ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்துக்கொண்டிருக்கின்றனர். அதன்படி ‘வதந்தி 2’ வெப் தொடரில் நடிகர் சசிகுமார் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என ஏற்கனவே தகவல் வெளியானது. அதே சமயம் இதன் படப்பிடிப்புகளும் ஏற்கனவே தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த வெப் தொடரில் இரண்டு கதாநாயகிகள் ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் கசிந்துள்ளது. அதாவது ‘பீஸ்ட்’, ‘டாடா’ ஆகிய படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான அபர்ணா தாஸும், ‘நட்பே துணை’, ‘டிக்கிலோனா’ ஆகிய படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகை அனாகாவும் இந்த வெப் தொடரில் நடித்து வருவதாக சொல்லப்படுகிறது. மேலும் இந்த வெப் சீரிஸ் அடுத்த ஆண்டில் வெளியாக வாய்ப்பிருப்பதாகவும் தகவல் பரவி வருவது குறிப்பிடத்தக்கது.