கூலி படத்தின் எட்டாவது நாள் வசூல் குறித்த விவரம் வெளியாகி உள்ளது.
கடந்த ஆகஸ்ட் 14ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியான படம் தான் கூலி. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் படத்தை தயாரித்திருந்தது. அனிருத் இந்த படத்தின் இசையமைப்பாளராகவும் கிரிஷ் கங்காதரன் இதன் ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றியிருந்தார்கள். மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வெளியான இந்த படம் முழுவதையும் ரஜினி தன் தோளில் தாங்கி இருந்தார். ஸ்டைலிஷானா வில்லனாக நாகார்ஜுனாவும், யூகிக்க முடியாத கதாபாத்திரத்தில் சௌபின் சாஹிரும் நடித்து அசத்தியிருந்தார்கள். ஸ்ருதிஹாசனும் உணர்வுப்பூர்வமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். இது தவிர நடிகை ரஞ்சிதா ராம் வில்லியாக நடித்திருந்தது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. இவ்வாறு இப்படத்தில் பல பிளஸ் பாய்ண்டுகள் இருந்தாலும், லோகேஷ் கனகராஜின் முந்தைய படங்களில் இருந்த சில விஷயங்கள் இந்த படத்தில் மிஸ் ஆனதால் இப்படம் ஜெனரல் ஆடியன்ஸ் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இருந்தபோதிலும் இந்த படம் வெளியான நான்கு நாட்களில் ரூ.400 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தது என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. ஆனால் அதன் பிறகு ‘கூலி’ படத்தின் வசூல் நாளுக்கு நாள் சரிய தொடங்கியுள்ளது.
இந்நிலையில் இப்படம் எட்டாவது நாளில் இந்திய அளவில் ரூ.6.20 கோடி தான் வசூல் செய்திருக்கிறது என புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன. விரைவில் இப்படத்திற்கு மறு தணிக்கை செய்யப்பட்டு ‘யூ/ஏ’ சான்றிதழ் கிடைத்தால் வசூல் அதிகரிக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.