தனுஷ் நடிக்கும் இட்லி கடை படத்தின் இரண்டாவது பாடல் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.
தனுஷ் நடிப்பில் கடைசியாக ‘குபேரா’ திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. அதைத்தொடர்ந்து 2025 அக்டோபர் 1ஆம் தேதி தனுஷின் இட்லி கடை திரைப்படம் வெளியாக இருக்கிறது. இந்த படத்தை தனுஷே இயக்கியும் இருக்கிறார். தனுஷின் 52 வது படமான இந்த படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. கிரண் கௌஷிக் இந்த படத்தின் ஒளிப்பதிவாளராகவும் ஜி.வி பிரகாஷ் இந்த படத்தின் இசையமைப்பாளராகவும் பணியாற்றியுள்ளனர். இப்படத்தில் நடிகர் தனுஷுடன் இணைந்து நித்யா மேனன், ராஜ் கிரண், அருண் விஜய், ஷாலினி பாண்டே மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்த நிலையில் இந்த படத்தில் இருந்து அடுத்தடுத்த போஸ்டர்களும், முதல் பாடலும் வெளியாகி ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. அடுத்தது (ஆகஸ்ட் 27) விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இன்று மாலை 5 மணி அளவில் இந்த படத்தில் இருந்து ‘எஞ்சாமி தந்தானே’ எனும் இரண்டாவது பாடல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பாடலை நடிகர் தனுஷ் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பாடலின் ப்ரோமோ வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. அதேபோல் தனுஷ் – ஜி.வி. பிரகாஷ் காம்போவில் உருவாகியுள்ள இந்த பாடலும் ட்ரெண்டிங் பாடலாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.