ஹரிஷ் கல்யாண் நடிக்கும் டீசல் படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவின் இளம் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் ஹரிஷ் கல்யாண். இவரது நடிப்பில் வெளியான பார்க்கிங், லப்பர் பந்து ஆகிய திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இதற்கிடையில் ஹரிஷ் கல்யாண் டீசல் எனும் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த பல வருடங்களுக்கு முன்பாகவே தொடங்கப்பட்டு முடிவுக்கு வந்தது. இந்த படத்தை சண்முகம் முத்துசாமி இயக்க தர்ட் ஐ என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இந்த படத்தை தயாரித்திருக்கிறது. திபு நினன் தாமஸ் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இந்த படத்தில் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக அதுல்யா ரவி நடித்துள்ளார். மேலும் வினய் ராய், சாய் குமார், அனன்யா, காளி வெங்கட், விவேக் பிரசன்னா, ரமேஷ் திலக் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தில் இருந்து அடுத்தடுத்த போஸ்டர்களும், பாடல்களும் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்நிலையில் இந்த படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.

இந்த டீசரை பார்க்கும்போது ஹரிஷ் கல்யாண் இந்த படத்தில் ஆக்சன் அவதாரத்தில் நடித்திருக்கிறார் என தெரியவந்துள்ளது. நீண்ட நாட்கள் கிடப்பில் போடப்பட்டிருந்த இந்த படம் அக்டோபர் 17ஆம் தேதி தீபாவளி தினத்தை முன்னிட்டு திரைக்கு வரும் எனவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும் இந்த படமானது ஹரிஷ் கல்யாணுக்கு அடுத்த வெற்றி படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.