வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் புதிய படம் குறித்த லேட்டஸ்ட் தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குனர்களில் ஒருவரான வெற்றிமாறன் கடைசியாக ‘விடுதலை பாகம் 2’ திரைப்படத்தை இயக்கியிருந்தார். அதே சமயம் சூர்யா நடிப்பில் ‘வாடிவாசல்’ திரைப்படத்தை இயக்குவதற்கு கமிட்டானார். ஆனால் இந்த படம் ஒரு சில தவிர்க்க முடியாத காரணங்களால் தள்ளிப்போய்க் கொண்டே இருக்கிறது. இதற்கிடையில் வெற்றிமாறன், சிம்புவை வைத்து புதிய படத்தை இயக்கப் போவதாக சொல்லப்படுகிறது.

அதாவது சிம்பு, ‘தக் லைஃப்’ படத்திற்கு பிறகு ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் தனது 49வது திரைப்படத்தில் நடிப்பார் என சொல்லப்பட்டது. அதன் பிறகு தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் 50வது படத்திலும், அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் 51வது படத்திலும் நடிப்பார் என அறிவிப்பு வெளியானது. ஆனால் நடிகர் சிம்பு திடீரென எடுத்த அதிரடி முடிவால் வெற்றிமாறன் தான் சிம்புவின் அடுத்த படத்தை இயக்கப் போகிறார் என சமீப காலமாக பல தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அதன்படி சிம்பு – வெற்றிமாறன் கூட்டணியின் புதிய படத்தை வெற்றிமாறனே தயாரிக்க வாய்ப்பு உள்ளதாகவும் பேச்சு அடிபடுகிறது.
Finally,Vetrimaaran project announcement will come within 10 to 15days officially confirmed by #Vetrimaaran ♥️🔥#SilambarasanTR #STR49 #STRxVetrimaaran
pic.twitter.com/QJEogTRTGS— MuTHU Movie updates (@Muthupalani_) August 30, 2025
இந்நிலையில் சமீபத்தில் நடந்த விழா ஒன்றில் பேசிய வெற்றிமாறன், தன்னுடைய அடுத்த படம் குறித்த அப்டேட்டை கொடுத்து இருக்கிறார். அதன்படி இன்னும் 10 முதல் 15 நாட்களில் தன்னுடைய அடுத்த படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் இந்த படத்திற்கு பிறகு ‘வடசென்னை 2’ படம் தொடங்கும் எனவும் கூறியுள்ளார்.
இதன் மூலம் வெற்றிமாறன் குறிப்பிட்டது சிம்பு படமாக இருக்கும் என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கமெண்ட் செய்து வருகின்றனர். மேலும் வெற்றிமாறன் – சிம்பு கூட்டணியின் புதிய படம் நாளுக்கு நாள் ரசிகர்கள் மத்தியில் உச்சகட்ட எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.