மாதம்பட்டி ரங்கராஜ் பேஷன் டிசைனரான ஜாய் கிரிசில்டாவை இரண்டாவது திருமணம் செய்துகொண்டதாக சர்ச்சையை கிளம்பியது.
நடிகரும், பிரபல சமையல்துறை நிபுணருமான மாதம்பட்டி ரங்கராஜ், ஸ்ருதி என்ற பெண்ணை திருமணம் செய்துக்கொண்ட நிலையில், அவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இதனிடையே மாதம்பட்டி ரங்கராஜ் பேஷன் டிசைனரான ஜாய் கிரிசில்டாவை இரண்டாவது திருமணம் செய்துகொண்டதாக திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

மேலும் மாதம்பட்டி ரங்கராஜூடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து ஜாய் 6 மாத கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தார். பின்னர் மீண்டும் மாதம்பட்டி ரங்கராஜ் தனது மனைவி ஸ்ருதியுடன் பங்கேற்றது பேசும்பொருளானது. இதனை தொடர்ந்து ஜாய் கிரிசில்டா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குழந்தையின் பெயரை ராஹா ரங்கராஜ் எனவும் அறிவித்தார். இதனால் மாதம்பட்டி ரங்கராஜ் மீது பல்வேறு விதமாக விமர்சனங்கள் கிளம்பியது.
இந்நிலையில், முதல் மனைவியை விவகாரத்து செய்யாமல், இன்னொருவரை கா்ப்பாக்கியது சட்டப்படி குற்றம் என்பதால் மாதம்பட்டி ரங்கராஜ் கைதாக வாய்ப்புள்ளது என வழக்கறிஞா்கள் கூறுகின்றனா்.
தமிழக அரசின் புதிய அறிவிப்பு! இனி ஏல முறையில் மட்டுமே பேன்சி எண்கள் ஒதுக்கீடு…