spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுதமிழக அரசின் புதிய அறிவிப்பு! இனி ஏல முறையில் மட்டுமே பேன்சி எண்கள் ஒதுக்கீடு…

தமிழக அரசின் புதிய அறிவிப்பு! இனி ஏல முறையில் மட்டுமே பேன்சி எண்கள் ஒதுக்கீடு…

-

- Advertisement -

வாகனங்களுக்கான பேன்சி எண்களை ஏல முறையில் ஒதுக்கீடு செய்யும் வகையில் வரைவு திருத்த விதிகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.தமிழக அரசின் புதிய அறிவிப்பு! இனி ஏல முறையில் மட்டுமே பேன்சி எண்கள் ஒதுக்கீடு…

தமிழகத்தில் வாகனங்களுக்கான பேன்சி எண்களை ஒதுக்கீடு செய்யும் முறையில் மாற்றம் கொண்டுவர மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம் செய்து தமிழ்நாடு அரசு வரைவு விதிகளை வெளியிட்டுள்ளது.

we-r-hiring

இதன்படி இனி வரும் நாட்களில் ஏலம் முறையில் பேன்சி எண்கள் ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது. இதற்கான விண்ணப்ப கட்டணம் 2000 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

வாகன உரிமையாளர்கள் Parivahan இணையதளத்தில் பதிவு செய்து தங்களுக்கு தேவையான பேன்சி எண்களை தேர்வு செய்ய வேண்டும்.

இதனை தொடர்ந்து நிர்ணயம் செய்யப்பட்ட நாளில் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை ஏலம் நடைபெறும்.  ஏலத்தின் முடிவுகள் அன்றைய தினமே வெளியிடப்படும்.

ஏலத்தில் பேன்சி நம்பரை எடுத்த வாகன உரிமையாளர் 30 நாட்களுக்குள் வாகனத்தை பதிவு செய்யவில்லை என்றால் அந்த எண் ஒதுக்கீடு ரத்து செய்யப்படும்.

பேன்சி எங்களுக்கான அடிப்படை விலையை பொருத்தவரையில் 2000 முதல் 2 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்த விதிகள் தொடர்பாக ஏதாவது ஆட்சேபனை மற்றும் கருத்துக்கள் 30 நாட்களில் உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சென்னை தலைமைச் செயலகம் என்ற முகவரிக்கு அனுப்பலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனுபான கடையை அகற்ற கோரிய மனு முடித்து வைப்பு…

MUST READ