தமிழ் சினிமாவில் தற்போது தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவராக வலம் வரும் சிவகார்த்திகேயன் மதராஸி படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் வருகின்ற செப்டம்பர் 5ஆம் தேதி உலகம் முழுவதும் திரைக்கு வர இருக்கிறது. இந்த படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்கியுள்ளார். அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்க ஸ்ரீ லட்சுமி மூவிஸ் நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது. காதல் கலந்த ஆக்சன் படமாக உருவாகி இருக்கும் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. அதன்படி ஏற்கனவே படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்து தற்போது பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
இதற்கிடையில் படத்தின் டீசர், ட்ரெய்லர் என அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன், மதராஸி படம் குறித்து பேசி உள்ளார். அதன்படி அவர், “ஏ.ஆர். முருகதாஸ் என்னிடம் படம் பண்ணுவோம் என்று சொல்லும்போது நான் உற்சாகமாக இருந்தேன். கதையை வேறொரு நாள் சொல்கிறேன் என்று சொன்னார். நான் கதை கேட்கப் போகும்போது, தீனா, ரமணா, கஜினி, துப்பாக்கி மாதிரியான படங்களை நான் கேட்கவே கூடாது என்று நினைத்தேன். ஏனென்றால் என்னுடைய படங்களிலேயே பார்ட் 2 எடுக்க மிகவும் யோசிப்பேன்.
அப்படி இருக்கும்போது அதெல்லாம் சினிமாவின் சின்னமான படங்கள். அதை திருப்பி பண்ண வேண்டும் என்று நினைப்பதே தப்பு. அதெல்லாம் நான் ரசித்த படங்கள். ஆனால் அதே மாதிரி தாக்கம் கொடுக்கக்கூடிய படமாக இருக்கும் என்று நம்பிக்கையோடு போனேன். ஏ.ஆர். முருகதாஸ் ‘மதராஸி’ முதல் பாதியை சொன்னதும் எனக்கு பயங்கர குஷியாகிவிட்டது. ஒவ்வொரு நாளும் கதை சொல்லும் போது இன்னும் அருமையாக இருந்தது” என்று தெரிவித்துள்ளார்.
தீனா, ரமணா, கஜினி, துப்பாக்கி மாதிரி படம் பண்ணக்கூடாதுன்னு நினைச்சேன்…. மேடையில் சிவகார்த்திகேயன்!
-
- Advertisement -