இயக்குனர் லோகேஷ் கனகராஜ், ரசிகர்கள் எதிர்பார்க்கின்ற மாதிரி படம் எடுக்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் தற்போது ட்ரெண்டிங் இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இவரது இயக்கத்தில் சமீபத்தில் கூலி திரைப்படம் வெளியாகி வெற்றி நடைபோட்டு வருகிறது. அதாவது மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வெளியான இந்த படம் ஜெனரல் ஆடியன்ஸ் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் ரஜினி ரசிகர்கள் இந்த படத்தை கொண்டாடி வருகிறார்கள். அந்த வகையில் இப்படம் கிட்டத்தட்ட ரூ.500 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்திருக்கிறது என தகவல் வெளியாகி வருகிறது. இந்நிலையில் இவரை நெட்டிசன்கள் பலரும் ட்ரோல் செய்து வருகின்றனர். அதாவது ஆரம்பத்தில் கைதி என்ற வெற்றி படத்தை கொடுத்து புகழின் உச்சிக்கு சென்ற லோகேஷ் கனகராஜுக்கு விஜய், கமலை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதன் பிறகு இவர் இயக்கிய ‘லியோ’ திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில் பெரிய அளவில் ட்ரோல் செய்யப்பட்டார். அடுத்தது தற்போது ‘கூலி’ படம் வெளியான பின்னரும் அந்த படத்தில் இருக்கும் பல லாஜிக் மிஸ்டேக்குகளை குறிப்பிட்டு பலரும் லோகேஷ் கனகராஜை விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் நடந்த பேட்டியில் பேசிய லோகேஷ், சில விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார். அதன்படி அவர், “ரசிகர்களின் எதிர்பார்ப்பு தான் என்னை இந்த இடத்தில் உட்கார வைத்திருக்கிறது. இந்த எதிர்பார்ப்பு இல்லை என்றால் நாங்கள் சினிமா பண்ண முடியாது. அதை குறை சொல்லவும் முடியாது.
எடுத்துக்காட்டாக ‘கூலி’ படத்தை எடுத்துக் கொண்டால், நாங்கள் அது டைம் ட்ராவல் படம் என்றும், எல்சியு படம் என்றும் சொல்லவில்லை. ரசிகர்கள் தான் அப்படி பேசிகிட்டு இருந்தாங்க. ஒவ்வொரு நாளும் லோகேஷ் படம் இப்படி தான் இருக்கும், ரஜினி படம் இப்படி தான் இருக்கும் அப்படின்னு எதிர்பார்த்துட்டு போறாங்க. அதை தடுக்க முடியாது. ஆனால் அதேசமயம் ரசிகர்கள் எதிர்பார்க்கிற மாதிரி என்னால் படம் எடுக்க முடியாது. ஒரு படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தால் சூப்பர். பூர்த்தி செய்யவில்லை என்றால் அடுத்த படத்தில் நான் முயற்சி செய்வேன்” என்று தெரிவித்துள்ளார்.