Homeசெய்திகள்சினிமாவசூலில் அடித்து நொறுக்கும் 'லோகா'.... தென்னிந்திய சினிமா வரலாற்றில் புதிய சாதனை!

வசூலில் அடித்து நொறுக்கும் ‘லோகா’…. தென்னிந்திய சினிமா வரலாற்றில் புதிய சாதனை!

-

- Advertisement -

லோகா படத்தின் வசூல் குறித்த புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.வசூலில் அடித்து நொறுக்கும் 'லோகா'.... தென்னிந்திய சினிமா வரலாற்றில் புதிய சாதனை!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை கல்யாணி பிரியதர்ஷன். இவர் தமிழில் ‘மாநாடு’ படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். தற்போது இவர், ரவி மோகனுடன் இணைந்து ‘ஜீனி’ படத்தில் நடித்திருக்கிறார். இந்த படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தவிர கார்த்தியுடன் இணைந்து ‘மார்ஷல்’ படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் கல்யாணி பிரியதர்ஷன். இதற்கிடையில் இவர், மலையாளத்தில் லோகா சாப்டர் 1: சந்திரா எனும் சூப்பர்வுமன் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை துல்கர் சல்மான் தயாரிக்க டோமினிக் அருண் இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் கல்யாணி பிரியதர்ஷன் உடன் இணைந்து நஸ்லேன், சந்து சலீம் குமார், சாந்தி பாலச்சந்திரன், அருண் குரியன் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படமானது கடந்த ஆகஸ்ட் 28ஆம் தேதி ஓணம் பண்டிகையை முன்னிட்டு திரையிடப்பட்டது. வெளியான முதல் நாளிலிருந்தே ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வரும் இந்த படம் தமிழிலும் வெற்றி நடைபோட்டு வருகிறது. வசூலில் அடித்து நொறுக்கும் 'லோகா'.... தென்னிந்திய சினிமா வரலாற்றில் புதிய சாதனை!அந்த வகையில் இப்படம் முதல் 7 நாட்களில் உலக அளவில் ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது என புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன. இனிவரும் நாட்களில் இந்த படத்தின் வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தென்னிந்திய சினிமாவிலேயே கதாநாயகியை மையமாக வைத்து வெளியான படங்களில் 100 கோடி ரூபாயை வசூலித்த முதல் படம் என்ற சாதனையைப் படைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ