கூலி படத்தின் மொத்த வசூல் குறித்த விவரம் வெளியாகி உள்ளது.
சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் ரஜினி தற்போது ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக இருந்து வருகிறது. இதற்கிடையில் இவர், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘கூலி’ திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இதற்கு இசையமைத்திருந்தார். அதிரடி ஆக்ஷன் படமாக வெளியான இந்த படத்தில் ரஜினியுடன் இணைந்து சத்யராஜ், நாகார்ஜுனா, ஸ்ருதிஹாசன், சௌபின் சாகிர், ரச்சிதா ராம், உபேந்திரா, அமீர்கான் ஆகியோர் நடித்திருந்தனர். மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உலகம் முழுவதும் வெளியான இந்த படம் ஜெனரல் ஆடியன்ஸ் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. அதாவது லோகேஷ் கனகராஜின் மற்ற படங்களில் இருந்த சில விஷயங்கள் இந்த படத்தில் இல்லாததால் வசூலிலும் அடிவாங்கியது. அந்த வகையில் இந்த படம் திரைக்கு வருவதற்கு முன்பாக கோலிவுட்டில் ரூ.1000 கோடியை கடந்து விடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ரூ.350 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம் தற்போது வரை ரூ.520 கோடி வரை தான் வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஜினியின் சினிமா கேரியரில் ரூ.500 கோடியை தொட்ட மூன்றாவது படம் இது என்றாலும் கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான ‘ஜெயிலர்’ படத்தின் வசூலை இப்படம் முறியடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.