விஜயின் கோட் திரைப்படம் ஒரு வருடத்தை நிறைவு செய்துள்ளது.
கடந்த ஆண்டு செப்டம்பர் 5ஆம் தேதி விஜயின் நடிப்பில் ‘கோட்’ என்று சொல்லப்படும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் விஜய், அப்பா- மகன் என இரட்டை வேடங்களில் நடித்திருந்தார். இவருடன் இணைந்து சினேகா, பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி சௌத்ரி, மைக் மோகன் மற்றும் பலர் நடித்திருந்தனர். வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. யுவன் சங்கர் ராஜா இதற்கு இசையமைத்திருந்தார். மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. ஆனால் விஜய் ரசிகர்கள் இந்த படத்தை கொண்டாடி தீர்த்தனர். அந்த வகையில் ரூ.400 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம் ரூ.450 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தது. இது தவிர இந்த படத்தின் இறுதியில் இரண்டாம் பாகத்திற்கு லீட் கொடுத்து முடிக்கப்பட்டது. ஆனால் தற்போது விஜய் முழு நேர அரசியல்வாதியாக மாறி இருப்பதால் இரண்டாம் பாகம் எப்படி உருவாகும்? என்ற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. ஒருவேளை விஜய் மீண்டும் சினிமாவில் என்ட்ரி கொடுத்தால் ‘GOAT vs OG’ படத்தை திரையில் கொண்டாட ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.