பிரபல நடிகரின் வயிற்றில் காளை குத்தி கிழித்ததாக தகவல் வெளியாகி இருக்கிறது.
கடந்த 2007 ஆம் ஆண்டு வெளியான ‘முருகா’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் அசோக். அதைத் தொடர்ந்து இவர் ‘கோழி கூவுது’ படத்தின் மூலம் ஏராளமான ரசிகர்களை சேகரித்தார். இந்த படத்தில் இடம்பெற்ற ‘வாடாமல்லி காரி’ எனும் பாடல் 90ஸ் கிட்ஸ் ஃபேவரைட் பாடலாக அமைந்தது. மேலும் சில படங்களில் நடித்து வந்த அசோக், ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘மௌனம் பேசியதே’ சீரியலில் கதாநாயகனாக நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். இவ்வாறு தனது இயல்பான நடிப்பினாலும், எளிமையான குணத்தாலும் சின்னத்திரையில் மட்டுமல்லாமல் வெள்ளித்திரையிலும் பெயரையும் புகழையும் பெற்றுள்ளார் அசோக்.
Bull attack on actor #AshokKumar during the shoot of #VadaManjuVirattu 🐂🔥
Despite a minor injury, he was given immediate medical care and quickly bounced back to continue shooting with full spirit. 💪✨@ashokactor@PROSakthiSaran pic.twitter.com/l7ckfgjuEc
— PRO Sakthi Saravanan (@PROSakthiSaran) September 8, 2025

இவர் தற்போது வட மஞ்சு விரட்டு எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பின் போது அசோக் விபத்தில் சிக்கியுள்ளார். அதாவது அசோக்கை ஒரு காளை முட்டி அவரது வயிற்றில் கிழித்துள்ளது. இதை கண்ட படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதுமட்டுமில்லாமல் அசோக்கின் வயிற்றில் ரத்த காயம் ஏற்பட்டிருப்பதால் அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.