ஜனநாயகன் படம் குறித்த புதிய தகவல் வெளிவந்துள்ளது.
விஜயின் 69 ஆவது படமாக உருவாகும் ஜனநாயகன் திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தை முன்னிட்டு திரைக்கு வர தயாராகி வருகிறது. இந்த படத்தை கே.வி.என் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க ஹெச். வினோத் இப்படத்தை இயக்குகிறார். அனிருத் இதன் இசையமைப்பாளராக பணியாற்றுகிறார். இதில் விஜய் உடன் இணைந்து பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பாபி தியோல், பிரகாஷ்ராஜ், கௌதம் மேனன், பிரியாமணி, நரேன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அரசியல் கலந்த கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்தில் விஜய் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இதன் படப்பிடிப்புகள் ஏற்கனவே நிறைவடைந்து தற்போது பின்னணி வேலைகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ஆரம்பத்தில் இருந்தே அதிகமாக இருக்கும் நிலையில், படம் தொடர்பான பல அப்டேட்டுகள் வெளிவந்து ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டிவிடுகிறது. அந்த வகையில் தற்போது இந்த படத்தின் எடிட்டர் பிரதீப் E.ராகவ், ‘ஜனநாயகன்’ படம் குறித்த சில தகவல்களை பகிர்ந்துள்ளார்.
“#JanaNayagan has many exciting elements. It’s coming out really well👌. 100% Vijayism is guaranteed and you’ll witness it fully🥵. Even I’m waiting to watch it🤩”
– Editor #PradeepERagav pic.twitter.com/6zRWJLMkfb— AmuthaBharathi (@CinemaWithAB) September 11, 2025

அதன்படி அவர், “ஜனநாயகன் படத்தில் பல அற்புதமான விஷயங்கள் இருக்கிறது. படம் சிறப்பாக வந்து கொண்டிருக்கிறது. 100% இந்த படத்தில் விஜயின் விஜயிசத்தை (Vijayism) பார்க்க முடியும். நானும் அதற்காக தான் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். இந்த தகவல் ரசிகர்களின் எதிர்பார்ப்பை எக்கச்சக்கமாக அதிகப்படுத்தி உள்ளது.