STR 49 படம் குறித்த புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.
லிட்டில் சூப்பர் ஸ்டார் என்று கொண்டாடப்படும் சிம்பு கடைசியாக ‘தக் லைஃப்’ திரைப்படத்தில் நடித்திருந்தார். மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வெளியான இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றதோடு மட்டுமல்லாமல் பயங்கரமாக ட்ரோல் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து சிம்பு, ‘பார்க்கிங்’ படத்தின் இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கப் போகிறார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான பின்னர் ஒரு சில தவிர்க்க முடியாத காரணங்களால் சிம்புவின் அடுத்த படத்தை வெற்றிமாறன் இயக்கப்போகிறார் என்று சொல்லப்பட்டது. அதன்படி கடந்த சில தினங்களுக்கு முன்னர் சிம்பு – வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது. இந்த படத்திற்கு தற்காலிகமாக ‘STR 49’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கிறார். இந்த படத்தின் அறிவிப்பு ப்ரோமோ வெளியான போதே இந்த படமானது வெற்றிமாறன் இயக்கிய ‘வட சென்னை’ படத்தின் யுனிவர்ஸ் போல் தெரிந்தது.
இருப்பினும் இயக்குனர் வெற்றிமாறன் நடிகர் சிம்புவை வேறொரு பரிமாணத்தில் காட்டுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு குறித்த அப்டேட் வெளிவரும் என புதிய அப்டேட் கிடைத்துள்ளது. இது தவிர இந்த படத்தில் நடிகை சாய் பல்லவி கதாநாயகியாக நடிக்க வாய்ப்புள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இனிவரும் நாட்களில் மற்ற தகவல்கள் வெளியாகும் என நம்பப்படுகிறது.