spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்அரசியல்தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டோம் - ஓரணியில் தமிழ்நாடு மூலம் இணைந்தவர்கள் உறுதிமொழி

தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டோம் – ஓரணியில் தமிழ்நாடு மூலம் இணைந்தவர்கள் உறுதிமொழி

-

- Advertisement -

8,000-க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளுக்குட்பட்ட பகுதிகளில், ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தின் மூலம் திமுகவில் இணைந்தவர்கள் தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டோம் என உறுதிமொழியேற்றனர்.தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டோம் - ஓரணியில் தமிழ்நாடு மூலம் இணைந்தவர்கள் உறுதிமொழிஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தின் மூலம் ஒரு கோடிக்கும் அதிகமான குடும்பத்தினர் திமுகவில் இணைந்துள்ளனர். பேரறிஞர் அண்ணா பிறந்தநாளான இன்று, மாநிலம் முழுவதுமுள்ள 68 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குச்சாவடிகளில் அந்தந்த வாக்குச்சாவடிக்குட்பட்ட பகுதியில் அவர்களை ஒன்றுதிரட்டி, உறுதிமொழியேற்றிட வேண்டும் என முதலமைச்சர் அறிவுறுத்தியிருந்தார். இதனையடுத்து தமிழ்நாடு முழுவதும், ஒவ்வொரு வாக்குச்சாவடிக்குட்பட்ட பகுதிகளிலும் திமுகவில் இணைந்த குடும்பத்தினர் தமிழ்நாட்டை தலைகுனியவிடமாட்டோம் என உறுதிமொழியேற்றனர்.

தமிழ்நாடு முழுவதும் நடைபெற்ற உறுதிமொழியேற்பு நிகழ்வுகளில் அமைச்சர்கள், மாவட்டச்செயலாளர்கள், மக்கள் பிரதிநிதிகள், இளைஞர், இளம்பெண்கள் என திரளானோர் கலந்துக்கொண்டு உறுதிமொழியேற்றனர்.

அன்புமணி தலைமையில் இனி பாமக… ராமதாஸின் வழியை பின்பற்றியே பயணிப்போம் – K.பாலு

we-r-hiring

MUST READ