நடிகர் அமீர்கான் தரப்பில் இருந்து, கூலி படத்தை இன்னும் பார்க்கவில்லை என அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.பாலிவுட்டில் மிகப்பெரிய ஸ்டார் நடிகராக வலம் வருபவர் அமீர்கான். இவர் நல்ல கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடிக்கக் கூடியவர். இவர் கடந்த ஆகஸ்ட் 14ஆம் தேதி ரஜினி நடிப்பில் வெளியான ‘கூலி’ திரைப்படத்தில் கேமியா ரோலில் நடித்திருந்தார். கிளைமாக்ஸில் இவருடைய என்ட்ரி பயங்கரமாக இருந்தாலும், இவருடைய கேரக்டர் பெரிய அளவில் ரசிகர்களை கவரவில்லை.
எனவே பலரும் இப்படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜை திட்டி தீர்த்து வந்தனர். இது ஒரு பக்கம் இருக்க, மற்றொரு பக்கம் அமீர்கான், ‘கூலி’ படத்தில் நடித்தது தான் செய்த தவறு என்றும் இது போன்ற கேரக்டரில் இனிமேல் நடிக்க மாட்டேன் என்றும் பேட்டி ஒன்றில் கூறியதாக பல தகவல்கள் சமீபகாலமாக சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது. ஆனால் தற்போது இது குறித்து அமீர்கான் தரப்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
அதில், “அமீர்கான் இன்னும் ‘கூலி’ படத்தையே பார்க்கவில்லை. ‘கூலி’ படத்தை அமீர்கான் பார்க்கும்போது லோகேஷ் கனகராஜும் உடன் இருக்க வேண்டும் என்று விரும்புகிறார். ஆனால் அது இதுவரை நடக்கவில்லை. ‘கூலி’ படத்தின் வெற்றி, சம்பந்தப்பட்ட அனைவரின் புரிதலையும், கடின உழைப்பையும் பற்றி பேசுகிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
- Advertisement -