பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியான கேஜிஎஃப் சாப்டர் 1 மற்றும் கேஜிஎஃப் 2 ஆகிய படங்களின் மூலம் இந்திய அளவில் ஏராளமான ரசிகர்களை தன் பக்கம் கவர்ந்திழுத்தவர் நடிகர் யாஷ். அதை தொடர்ந்து இவர், ராமாயணா திரைப்படத்தில் ராவணனாக நடித்து வருவதாக சொல்லப்படுகிறது. மேலும் இவர், கீது மோகன்தாஸ் இயக்கத்தில் டாக்ஸிக் எனும் திரைப்படத்திலும் நடித்துக் கொண்டிருக்கிறார். பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகும் இந்த படத்தை கேவிஎன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகி வரும் இந்த படத்தில் யாஷுடன் இணைந்து நயன்தாரா, ஹூமா குரேஷி, ருக்மினி வசந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிப்பதாக தகவல் வெளியாகி வருகின்றன.
இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஏற்கனவே மும்பை போன்ற பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்றது. அதே சமயம் இந்த படத்தில் இருந்து முன்னோட்ட வீடியோ வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. அடுத்தது இப்படம் 2026 மார்ச் 19ஆம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதற்கிடையில் இந்த படத்தின் இயக்குனர் கீது மோகன்தாஸுக்கும், யாஷுக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதன் காரணமாக சில காட்சிகளை நடிகர் யாஷே இயக்கியதாகவும் பேச்சு அடிபடுகிறது.
இது ஒரு பக்கம் இருக்க, மற்றொரு பக்கம் கேஜிஎஃப் 2 படம் வெளியாகி கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் கடந்த நிலையில் யாஷை மீண்டும் திரையில் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் இதன் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கி இருப்பதாகவும், இறுதி கட்ட படப்பிடிப்பை பெங்களூரில் இந்த மாத இறுதியில் நடத்த படக்குழு திட்டமிட்டு இருப்பதாகவும் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்து விடும் என நம்பப்படுகிறது. இந்த தகவல் யாஷ் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை தந்துள்ளது.
- Advertisement -