ஜனநாயகன் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் விரைவில் வெளியாகும் என தகவல் கிடைத்திருக்கிறது.
தமிழ் சினிமாவில் தீரன் அதிகாரம் ஒன்று, துணிவு ஆகிய படங்களின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் ஹெச். வினோத். இவர் தற்போது விஜயின் கடைசி படமான ஜனநாயகன் படத்தை இயக்கி வருகிறார். ஆரம்பத்தில் கமல்ஹாசனுக்காக எழுதப்பட்ட இந்தக் கதையை விஜய்க்காக சில மாற்றங்களை செய்து விஜய்க்கான சிறந்த ஃபேர்வெல் படமாக எடுத்துள்ளாராம் ஹெச். வினோத். அதன்படி மாஸ் கமர்சியல் ஆக்சன் படமாக உருவாகும் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ஆரம்பத்திலிருந்தே அதிகமாக இருந்து வருகிறது.
எனவே 2026 ஜனவரி 9ஆம் தேதி திரைக்கு வரவுள்ள இந்த படத்தை திருவிழா போல் கொண்டாட ரசிகர்கள் பலரும் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். இதற்கிடையில் படம் தொடர்பாக ஒவ்வொரு அப்டேட்டுகளும் வெளிவந்து ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் ஏற்கனவே இந்த படத்தில் இருந்து கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் அடுத்தடுத்த போஸ்டர்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன. அடுத்தபடியாக இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் 2025 தீபாவளி தினத்தை முன்னிட்டு வெளியாகும் என சொல்லப்பட்டது.
ஆனால் தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால், விஜய் குரலில் உருவாகி இருக்கும் ‘ஜனநாயகன்’ படத்தின் முதல் பாடலை வருகின்ற அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் வெளியிட படக்குழு திட்டமிட்டு வருவதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆகையினால் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படத்தை கே.வி.என் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இதற்கு இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


