சக்தித் திருமகன் படத்தில் முதலில் நடிக்க வேண்டியது வேறொரு நடிகர் என்று இயக்குனர் அருண் பிரபு கூறியுள்ளார்.
இயக்குனர் அருண் பிரபு தமிழ் சினிமாவில் ‘அருவி’ என்ற படத்தை இயக்கியதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர். இதற்குப் பிறகு இவர் ‘வாழ்’ திரைப்படத்தை இயக்கினார். ஆனால் இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. அடுத்தது விஜய் ஆண்டனியை வைத்து ‘சக்தித் திருமகன்’ எனும் திரைப்படத்தை இயக்கியுள்ளார் அருண் பிரபு. இந்த படம் கடந்த செப்டம்பர் 19ஆம் தேதி திரைக்கு கொண்டுவரப்பட்டது. இப்படம் தமிழில் சக்தித் திருமகன் என்ற பெயரிலும், தெலுங்கு உள்ளிட்ட மற்ற மொழிகளில் பத்ரகாளி என்ற பெயரிலும் திரையிடப்பட்டது. அரசியல்- திரில்லர் ஜானரில் வெளியான இந்த படம் ஓரளவிற்கு நல்ல வரவேற்பை பெற்று வெற்றி நடைபோட்டு வருகிறது. இந்த படத்தை விஜய் ஆண்டனி தானே தயாரித்து, இதற்கு இசையும் அமைத்திருந்தார். செல்லி ஆர். காலிஸ்ட் ஒளிப்பதிவு பணிகளை கவனித்திருந்தார்.
#ShakthiThirumagan Director Arun #PrabuRecent Interview 🤯
– I first told the story of Shakthi Thirumagan to #SilambarasanTR, but he was a blast after hearing the story. But due to some unavoidable reasons, he couldn’t do it…..💥📈🤯
pic.twitter.com/gBTpeCQSLd— Movie Tamil (@_MovieTamil) September 24, 2025

இந்நிலையில் இந்த படத்தில் விஜய் ஆண்டனிக்கு பதில் வேறொரு நடிகர் நடிக்க இருந்ததாக இயக்குனர் அருண் பிரபு சமீபத்தில் நடந்த பேட்டியில் பேசியுள்ளார். அதன்படி அவர், “நான் முதலில் சக்தித் திருமகன் படத்தின் கதையை சிம்புவிடம் தான் சொன்னேன். அவர் கதையை கேட்டு பிரமித்து போனார். ஆனால் ஒரு சில தவிர்க்க முடியாத காரணங்களால் அவரால் இந்த படத்தில் நடிக்க முடியவில்லை” என்று தெரிவித்துள்ளார்.