STR 49 படத்தின் ஷூட்டிங் குறித்த அப்டேட் கிடைத்துள்ளது.
நடிகர் சிம்பு, தக் லைஃப் படத்திற்கு பின்னர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் தனது 49 ஆவது படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த படமானது தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும் சிம்புவின் 49 ஆவது படத்தை வெற்றிமாறன் இயக்கப்போகிறார் என்றும், தயாரிப்பாளர் தாணு இந்த படத்தை தயாரிக்கப்போகிறார் என்றும் அண்மையில் அறிவிப்பு வெளியானது. அந்த அறிவிப்பின்படி தற்காலிகமாக STR 49 என்று தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இந்த படம் ‘வடசென்னை’ படத்தின் யுனிவர்ஸாக உருவாகும் போல் தெரிகிறது. அதுமட்டுமில்லாமல் இந்த படம் இரண்டு பாகங்களாக உருவாகும் எனவும் பேச்சு அடிபடுகிறது. இது தவிர படத்தில் சாய் பல்லவி கதாநாயகியாகவும், அனிருத் இசையமைப்பாளராகவும் பணியாற்ற இருக்கின்றனர் என சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் படக்குழு நேற்று ( செப்டம்பர் 26) முக்கிய அறிவிப்பை வெளியிட்டிருந்தது. வருகின்ற அக்டோபர் 4ஆம் தேதி STR 49 படம் தொடர்பான புதிய ப்ரோமோ வெளியாகும் என வெற்றிமாறன் மற்றும் சிம்பு இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது. அந்த புகைப்படத்தில் சிம்பு புதிய தோற்றத்தில் காணப்படுகிறார்.
மேலும் வி கிரியேஷன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து, அட்மேன் சினி ஆர்ட்ஸ் நிறுவனமும் இப்படத்தை தயாரிக்க உள்ளதாம். இது தொடர்பான அறிவிப்புதான் அக்டோபர் 4 அன்று வெளியாக இருக்கிறதாம். இந்நிலையில் இதன் கூடுதல் தகவல் என்னவென்றால் இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கும் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த தகவல் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை தந்துள்ளது.