அருண் விஜய் நடிப்பில் தற்போது ‘ரெட்ட தல’ எனும் திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படம் இந்த ஆண்டு இறுதிக்குள் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம் நாளை (அக்டோபர் 1) அருண் விஜய், தனுஷ் உடன் இணைந்து நடித்திருக்கும் ‘இட்லி கடை’ திரைப்படம் உலகம் முழுவதும் ரிலீஸாக இருக்கிறது. அதற்கு முன்பாக அருண் விஜய், பாலா இயக்கத்தில் வணங்கான் எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் அருண் விஜய் காது கேளாத, வாய் பேச முடியாதவராக நடித்திருந்தார். இப்படம் கடந்த ஜனவரி மாதம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்றது.
அதிலும் இயக்குனர் பாலா, அருண் விஜயை வேறொரு பரிமாணத்தில் காட்டி இருந்தார். அருண் விஜயின் நடிப்பும் பெரிய அளவில் பேசப்பட்டது. பொதுவாகவே இயக்குனர் பாலா தன்னுடைய படங்களில் நடிக்கும் ஹீரோக்களுக்கு தனது படங்களின் மூலம் புது அடையாளத்தை உருவாக்கி தருவார். அந்த வகையில் அருண் விஜயின் கேரியரில் வணங்கான் திரைப்படம் மிகவும் முக்கியமான படமாக அமைந்திருக்கிறது. இந்நிலையில் சமீபத்தில் நடந்த பேட்டியில் பேசிய அருண் விஜய், பாலா குறித்து பேசி உள்ளார்.
அதன்படி அவர், “எப்போதுமே மெனக்கெடலுக்கு நல்ல பலன் கிடைக்கும். பாலா சாருடன் வணங்கான் படம் பண்ணது எனக்கு கிடைத்த பாக்கியம். அந்த படத்தில் மிகவும் மகிழ்ச்சியாக நடித்தேன். காலம் கடந்து போனாலும் இந்த படம் கண்டிப்பாக பேசும். வணங்கான் படத்தை பலரும் பாராட்டினார்கள். சைகை மொழியை கற்றுக் கொண்டது எனக்கு பெரிய அனுபவம்” என்று தெரிவித்துள்ளார்.
- Advertisement -