நடிகர் அருண் விஜய், செக்கச் சிவந்த வானம் படம் குறித்து பேசி உள்ளார்.
கடந்த 2018 ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் ‘செக்கச் சிவந்த வானம்’ எனும் திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் விஜய் சேதுபதி, அருண் விஜய், சிம்பு, அரவிந்த்சாமி, பிரகாஷ்ராஜ், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி ராவ் மற்றும் பலர் நடித்திருந்தனர். இந்த படமானது தந்தையின் இடத்தை கைப்பற்ற ஒருவரை ஒருவர் பழிவாங்கும் கதையாக வெளியானது. இதில் அருண் விஜயின் கேரக்டரும் நெகட்டிவ் ஷேடட் ரோலில் வடிவமைக்கப்பட்டிருந்தது. அருண் விஜயும், ஃபுல் எனர்ஜியுடன் நடித்து அசத்தியிருந்தார். இந்நிலையில் இந்த படத்தில் தன்னுடைய கேரக்டரில் வேறொரு நடிகர் நடிக்க இருந்ததாக கூறியுள்ளார்.
#ArunVijay Recent
– In #ChekkaChivanthaVaanam, #FahadhFaasil was supposed to play my role.
– Due to some reasons, he was not able to take on that role, so I am onboarding it.#IdliKadai | #ManiRatnampic.twitter.com/STMn2OClCb— Movie Tamil (@_MovieTamil) September 30, 2025

அதன்படி சமீபத்தில் நடந்த பேட்டியில், “செக்கச் சிவந்த வானம் படத்தில் என்னுடைய கேரக்டரில் முதலில் பகத் பாசில் தான் நடிக்க இருந்தார். ஆனால் சில தவிர்க்க முடியாத காரணங்களால் அவர் அந்த படத்தில் நடிக்க முடியாமல் போனது. எனவே நான் அதில் நடித்தேன்” என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பான வீடியோவை ரசிகர்கள் இணையத்தில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.
மேலும் அருண் விஜய் தனுஷின் ‘இட்லி கடை’ படத்தில் வில்லனாக நடித்துள்ளார். இது தவிர ‘ரெட்ட தல’ எனும் படத்தையும் கைவசம் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.