spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாமக்களுக்கு நல்லது செய்ய அரசியலுக்கு வரல.... அவரோட நோக்கமே இதுதான்..... விஜய் குறித்து பிரபல இயக்குனர்!

மக்களுக்கு நல்லது செய்ய அரசியலுக்கு வரல…. அவரோட நோக்கமே இதுதான்….. விஜய் குறித்து பிரபல இயக்குனர்!

-

- Advertisement -

விஜய் குறித்து பிரபல இயக்குனர் பேட்டி அளித்துள்ளார்.மக்களுக்கு நல்லது செய்ய அரசியலுக்கு வரல.... அவரோட நோக்கமே இதுதான்..... விஜய் குறித்து பிரபல இயக்குனர்!

தமிழ் சினிமாவில் டாப் நடிகராக வலம் வரும் விஜய் தற்போது அரசியல்வாதியாகவும் மாறி, வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட இருப்பதாக ஏற்கனவே அறிவித்திருக்கிறார். அதன்படி தன்னுடைய 69 ஆவது படமான ‘ஜனநாயகன்’ படத்தை முடித்த விஜய், முழு நேர அரசியல்வாதியாக வலம் வருகிறார். அந்த வகையில் மாநாடு, பரப்புரை என அரசியலில் பிசியாக இருக்கிறார். இந்நிலையில் தான் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடந்த கரூர் பரப்புரையின் போது கூட்ட நெரிசல் காரணமாக கிட்டத்தட்ட 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. இது தொடர்பாக பலரும் விஜய்க்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வந்தாலும், விஜய்க்கு எதிராகவும் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதே சமயம் விஜய், கரூர் சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்து வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார். இந்நிலையில் நடிகை தேவயானியின் கணவரும் பிரபல இயக்குனருமான ராஜகுமாரன், விஜய் குறித்து பேசி உள்ளார். மக்களுக்கு நல்லது செய்ய அரசியலுக்கு வரல.... அவரோட நோக்கமே இதுதான்..... விஜய் குறித்து பிரபல இயக்குனர்!அதன்படி அவர், “மக்களுக்கு நல்லது செய்ய தான் அரசியலுக்கு வரேன்னு சொன்னா அதை நான் ஒப்புக்கொள்ள மாட்டேன். நல்லது செய்ய வேண்டும் என்றால் அதான் ஒரு படத்திற்கு ரூ.200 கோடி வாங்குறீங்களே. வருடத்திற்கு இரண்டு படம் நடித்துவிட்டு ரூ.100 கோடியை உங்களுக்கு வச்சுக்கிட்டு மீதமுள்ள ரூ.300 கோடியில் மக்களுக்கு நல்லது செய்யலாமே. சினிமாவை ஆண்ட மாதிரி அரசியலிலும் வந்து நாட்டை ஆள பார்க்கிறார். அது நல்லதில்லை. அது நடக்க வாய்ப்பும் இல்லை” என்று தனது கருத்தினை தெரிவித்துள்ளார்.

MUST READ